Tamil Islamic Media

வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.

கடந்த வாரம் ஒரு வேலையின் காரணமாக கும்பகோணம் சென்றிருந்தேன்.

வேலைகளை முடித்துக்கொண்டு திரும்புகிற நேரம் கண்ணில் எதேச்சையாக ஒரு போஸ்டர் தென்பட்டது. ( கீழே உள்ளது)

 

அது ஒரு கட்சி சார்ந்த போஸ்டர் ஆகையால் அது குறித்து நம்க்கு விமர்ச்சனம் தேவையில். ஆனால், அதில் உள்ள காட்சிகளும், அதன் வாசகமும் என் உள்ளத்தை உடைத்துவிட்டன.

அதில் ”வணங்கி மகிழ்கிறோம் ” என்ற வாசகம் இருந்தது, இதெல்லாம் நாம் தமிழகத்தில் அடிக்கடி பார்க்கும் ஒன்றுதான் என்றாலும் அதன் கீழ் பகுதியில் அதை வைத்தவரின் பெயரைப்பார்த்துதான் வருத்தமே அதிகமானது.

அஹமது கபீர் என்ற உயர்ந்த இறைவனின் நாமத்தை தன் பெயரின் சூட்டியிருப்பவர் என்பதுகண்டு வருத்தமே.

உயர்ந்தவனின் பெயரை வைத்திருப்பவர் வணங்கவேண்டியது யாரை?

ஒரு வேலை அவரிடம் அன்பளிப்பை பெற்று அவருக்கு தெரியாமலே அவரின் பெயர் இப்பலகையில் போடப்பட்டிருக்கிறாதா? என்பது கூட தெரியவில்லை.

எனக்கு அவர் அறிமுகம் இல்லை. தெரிந்தவர்கள் அவரிடம் எத்திவைக்கலாமே இன்னும் இது போன்ற போஸ்டர்கள் வாருங்கால தேர்தல் சூறாவழியில் வைக்கப்படலாம்.

அவர்களுக்கு நம் புறத்திலிருந்து இஸ்லாத்தின் நிலைப்பட்டை தெளிவுபடுத்துவது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமை என்ற எண்ணததை உறுதிப்படுத்தவே இந்த பதிவு.

நபியைப்பார்த்து இறைவன் கூறுகிறான் “ நபியே உம்மீது எத்திவைப்பது தான் கடமை”

நம் நிலைபாடுகள் எவ்வாறு இருந்தாலும் இறைவனுக்கு இணைவைக்கும் அளவிற்க்கு போகும்போது கண்டிப்பாக நாம் எத்திவைத்தாக வேண்டும்

- ஹஸனீ








No articles in this category...