Tamil Islamic Media

ஜனாஸா - மைய்யத்

 

மைய்யித்திற்கு கேட்கும் சக்தி உண்டு

♣   நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :
ஒரு மனிதனின் உடலை கப்ரில் அடக்கம் செய்து விட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை கூட மய்யித் கேட்கும்.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி 1338, ஸஹிஹ் முஸ்லிம் 5115


♣  (பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள், ‘உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள்.’ இறந்துவிட்டவர்களை அழைக்கிறீர்களே?’ என அவர்களிடம் கேட்கப்பட்டதும்,‘ அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர்; ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’‘ எனக் கூறினார்கள்.

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி 1370

 

மைய்யித்திற்கு பேசும் சக்தி உண்டு

♣   நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் :
ஒரு ஜனாஸா (சந்தூக்கில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அது நல் அமல்கள் செய்த மைய்யித்தாக இருந்தால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும்”. அது நற்செயல்கள் செய்யாத (மைய்யித்) தாக இருந்தால் “கை சேதமே என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இந்த சப்தத்தை மனிதனைத் தவிரவுள்ள அனைத்தும் செவிமடுக்கும். மனிதன் செவிமெடுத்தால் மயங்கி விழுந்து விடுவான்.

அபூசயீதுல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி 1316

 

மைய்யித்திற்கு பார்க்கும் சக்தி உண்டு

♣ இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும், என் தந்தையார் அவர்களையும், ஸியாரத் செய்வதற்காக செல்வேன். சாதாரணமாக உடை அணிந்த நிலையில். (மற்றவர்களிடம்) அங்கிருப்பது என் கணவரும் என் தந்தையும்தான் என்பேன். ஆனால், அங்கே உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! என் ஆடைகளை நன்றாக அணிந்த வண்ணமே செல்வேன். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வெட்கப்பட்டதின் காரணமாக.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
அஹ்மத் 24480






No articles in this category...