Tamil Islamic Media

அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்



பயமில்லாத தூயவனாய்
மாற்றங்கள் படைக்கும்
சந்ததிகள் கொண்டு
முன்னேறிச் செல்ல
தடையேதுமில்லை..!

 

இதோ இறைவனின் அருளால் மாற்றங்கள் பல படைக்கும் சந்ததிகளை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. ஊருக்கு ஊர் சீருடைகள் அணிந்து மாற்றார்களின் பள்ளிகளுக்கு சென்ற குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் முழு ஆசியோடு சீருடைகள் அணிந்து அண்ணெலும் பெருமானார் கற்றுத் தந்த வாழ்க்கையினை கற்பதற்கும் செயல்படுத்துவதற்கும் மதரஸாவிற்கும் செல்லும் காட்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இப்படித்தான் வாழவேண்டும் என்பதனை பெற்றோர்கள் கற்க தவறியதால், இப்படித்தான் வாழவேண்டும் என்று குழந்தைகளின் மூலம் இன்று தெரிகின்ற பெற்றவர்கள்தான் எத்தனை, எத்தனை.

 

உலகிற்கே வழி காட்டும்
ஒளிவெள்ள ஜோதி
பல காலமாய்
கிழிந்த உன் சட்டைப்பையில்
ஒட்டடைக்கு நடுவே
ஒய்யாரமாய் நிற்கிறது.!



கிழிந்த சட்டைப்பையிலிருந்து உள்ளத்திற்கு அந்த ஒளிவெள்ள ஜோதி இன்று இடம் மாறிக் கொண்டிருக்கின்றது.

இதனை விதைக்க அல்லும் பகலும் அலுவலக பணிகளுக்கிடையிலும், குடும்ப அழுத்தங்களுக்கிடையிலும் உழைக்கும் இளைஞர்கள் தான் எத்தனை எத்தனை.

நிறை குடம் தளும்பாது என்பதற்கேற்ப.. இந்த சமுதாயத்தின் இன்றைய தேவை என்ன என்பதையுணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை அறிவார்ந்த முறையில் செயல் படுத்தும் மார்க்க அறிஞர்கள் தான் எத்தனை எத்தனை. (இவர்களை நீங்கள் இண்டெர்னெட்டில் தேடினால் தென்படமாட்டார்கள்)


இந்தச் சமுதாயத்திற்காக தன்னலமின்றி உழைக்கும் பல மனிதர்களை நான் காண்கின்றேன். சமுதாய ஏழைகளின் துடர்களை துடைப்பதாகட்டும், நோயளிகளுக்கு உதவிகளாகட்டும், கல்வியில் வாழ்க்கை தரத்தை உயர்த்துவாகதட்டும் அவர்களின் பணிகள் வியக்கவைக்கின்றன. இமாம் மஹ்தி வருகை இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு தான் இருக்கும்.

 


கரம் பிடித்து
மனித சமூகத்தை
வெற்றியின் பக்கம்
அழைத்து செல்.!

பயணத்தை துவக்க
உன் முதல் அடியை
தப்பாமால் இப்போதே
வை.!

ஆம் இந்தச் சமுதாயம் தான் அழைத்துச் செல்லும். இந்தச் சமுதாயத்தை விட்டால் வேறு எந்தச் சமுதாயத்திற்கு இந்தத் தகுதியிருக்கின்றது. அப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கு களத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும், அந்த நாள் இன்ஷாஅல்லாஹ் வெகுதூரத்தில் இல்லை என்று.
வெரும் விமர்சனங்களும், அழுகைகளும் எந்த பயனமுமளிக்கப் போவதில்லை. நேர்வழி நம்மை நோக்கி வருவதில்லை. நாம் தான் அதனை நோக்கி செல்லவேண்டும். அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் .

 














No articles in this category...