Tamil Islamic Media

மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்

நாளைய மறுமையில் மூன்று விசயத்தை முன்னிறுத்தி இரண்டு விசயம் மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும்!

 

பரிந்துரைக்கும் இரண்டு விடயங்களில் ஒன்று அல்குர்ஆன், மற்றொன்று ரமலான் மாதம்.

 

யா அல்லாஹ்,உனக்காக இந்த மனிதன் பசித்திருந்தும்,தனது மன இச்சைகளை கட்டுப்படுத்தியும் பகல் பொழுதை கழித்தவன்.அதனால் இவனது பாவங்களை மன்னித்து இவன் மீது நரகத்தை தடை செய்வாயாக என்று ரமலான் மாதம் பரிந்துரைக்கும்.

 

யா அல்லாஹ்,உனக்காக என்னை ஓதி தொழுவதிலும்,தொடர்ந்து அதிகமதிகம் என்னை ஓதுவதிலும் இரவு பொழுதை ரமலானில் கழித்த இந்த மனிதனின் பிழைகளை மன்னித்து இவனுக்கு நரகத்தை தடை செய்வாயாக.என்று அல்குர்ஆன் பரிந்துரைக்குமாம்.

 

அல்குர்ஆன்-ரமலான் என்னும் இரண்டு விசயம் பசி,மன இச்சை,அதிகம் குர்ஆன் ஓதுதல் என்ற மூன்று காரியங்களுக்காக நாளை மறுமையில் மனிதனின் சுவனத்துக்கு பரிந்துரைக்கிறதாம்.அல்லாஹு அக்பர்.

 

நம் அனைவரையும் ரமலான் மற்றும் அல்குர்ஆன் பரிந்துரைக்கும் தகுதியான நபர்களாக்கி அல்லாஹ் தனது பேரருளை பொழிவானாக..

-கீழை ஜஹாங்கீர் அரூஸி.






No articles in this category...