ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !
நடுவண் அரசே!
நாசகாரக் கூட்டமே!
நானிலமே நகைக்குது
நல்லறமெலாம் கரையுது!
நாடிது ஆளவா?
நாங்களென்ன மாளவா?

அம்பானிக்கும் அதானிக்கும்
நாட்டைக் கொடுத்தாய்
காவிக்கும் கயவர்க்கும்
கோர்ட்டைக் கொடுத்தாய்!
நாடிது வாழவா?
நாங்களென்ன வீழவா?

கங்கையில் பிணஊர்வலம்
காஷ்மீரில் குண்டுமழை
காவேரியில் தமிழர்கனவு
கடலோரம் மீனவர்சிறை!
நாடிது நாடா?
நயவஞ்சகக் காடா?

மாட்டைத் தெய்வமாக்கி
மனிதனை பலியாக்கி
மதநல்லிணக்கம் தொலைத்து
மனிதநேயம் கரைத்து...
நாடிது பாரதமா?
நலிந்தோர்க்கு பாரமா?

இந்தியனே
இந்திய இஸ்லாமியனே
இணைந்திடு...!
பொதுசிவில் சட்டம்
பிசுபிசுத்துப் போக
போராடும் தருணமிது!

ஓடிவா!
ஓய்வறியாது ஓடிவா!!!

-- மிஸ்கீன்.


No articles in this category...