Tamil Islamic Media

விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அரேபிய விஞ்ஞானி ஒருவர் இருந்தார்! அவர் ஒளியியல், வானியல், கணிதம் ஆகியத் துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புகளை அவர் செய்திருக்கிறார்.ஆனால் அவருடைய பெயர் நாம் அதிகம் கேள்விப்படாத பெயர்களுள் ஒன்றாகவே இப்போது வரை இருக்கிறது!
ஒளி விலகல் (refraction), ஒளி வண்ணங்களாக நிறப்பிரிகை அடைவது (dispersion)போன்ற வற்றை கண்டுப்பிடித்தது யார்? இதை ஐசக் நியூட்டன் கண்டு பிடித்தார் என்றுத்தானே இன்று வரை பாடப்புத்தகங்களில் படிக்கிறோம் !

அல் ஹசன் அல்லது அபு அலி அல்ஹசன் என்கிற பெயரைக்கொண்ட அவருடைய பின் பாதிப் பெயர் இப்னு அல் ஹேதம். கி.பி.965 ல் இராக் நகரமான பாஸ்ராவில் பிறந்தார். பண்டைய ஈராக்கில் அவர்பிறந்தாலும், தற்போது எகிப்தில் உள்ள கெய்ரோவில் தான் அவர் பெரும்பாலும் வாழ்ந்தார்.

ஐரோப்பியர்கள் இருண்ட காலத்தில் தளர்ந்து போயிருந்தார்கள் அப்போது அரேபியரர்கள் பொற்காலத்தில் இருந்தார்கள்.அக்காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட இஸ்லாமிய விஞ்ஞான சிந்தனையாளர் தான் #அல்ஹாசன்.

இஸ்லாமிய நாகரீகத்தின் பொற்காலம் என்றழைக்கப்படும் காலகட்டத்தில் அறிவியல்,தொழில் நுட்பம்,மருத்துவம் போன்ற துறை சார்ந்த ஆராய்ச்சிகள் உச்சத்தில் இருந்தன. ஸ்பெயினிலிருந்து சீனாவரை பரவியிருந்த நிலபரப்பில் அந்தகாலத்தில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின. அவற்றில் பல இன்றைக்கும் நமக்குப் பயனளிக்கின்றன.ஆனால் அவை அபுல் ஹசனுக்கு பாராட்டையோ அங்கீகாரத்தையோ பெற்றுத் தரவில்லை.

ஒளி நம்முடைய கண்ணுக்குள் ஊடுருவுவதால் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இதை முதன் முதலில் கண்டுபிடித்து சொன்னவர் அல் ஹாசன்.
ஒளி ஊடுருவும் தன்மையை நம்கண் இழக்கும் போது பார்வையை இழந்து விடுகிறோம்.!
அதற்கு முன்னதாக விஞ்ஞானிகள் யூக்ளிடும்,தாலமியும் கண்ணிலிருந்து ஒளி வெளிப்படுவதாகவே கூறியிருந்தார்கள்.

நமது கண் செயல்படும் முறையையும் அவர் விளக்கியுள்ளார் .
ஒரு ஊசித்துளை கேமராவைப் போலவும் (Pinhole camera) இருட்டறையில் போடப்படும் ஒரு துளை எதிற்புறம் உள்ள காட்சியை அப்படியே பிரதிபலிப்பதைப் போல (Camera abscura) நமது கண் செயல்படுவதை அல் ஹாசன் விளக்கினார்.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் ஒளிப்படக் கருவிகள் (Camera) கண்டறியப்பட்டன.!!
இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் கைபேசியில் செயல்படும் கேமராவை அல் ஹாசன் விளக்கிய் தத்துவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன.
இப்படியாக நம்முடைய பார்வை, பார்வையியல், ஒளியியல் (Optics) போன்றவற்றை அல் ஹாசன் விரிவாக ஆராய்ந்து அறிவித்தார்.

தண்ணீர், எண்ணை போன்ற அடரத்தியான ஊடகங்களில் ஒளி மெதுவாக நகர்வதால் தான் ஒளிவிலகல் (refraction) ஏற்படுகிறது என்று மிகச்சரியாக அல் ஹாசன் விளக்கியிருந்தார்.

நன்றி

தி இந்து (தமிழ் நாளிதழ் 28.12.2016) #தகவல் பசுமை ஹாஜி
Source - mohamed Basheer






No articles in this category...