Tamil Islamic Media

உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!


உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
'இந்திய ராணுவ ஜெனரலின் செல்போன் எண்ணை வெளி​நாட்டுத்தீவிரவாதிகளுக்குக் கிடைக்கச்செய்து, செல்போன் சேவை நிறுவனத்தின் துணையுடன் அவரது பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டால் என்ன நடக்கும்?'

 உச்ச நீதிமன்றம் இந்தக் கேள்வியைக் கேட்டதும்​தான்... அதன் விபரீதமும், அதிகாரத்தில் உள்ள ஓட்டைகளும் நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது!

'தனது தொலைபேசி உரையாடல் தவறான அனுமதியின் பேரில் ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்யப்பட்டதால், அதனை வெளியிடக் கூடாது! என்று முன்னாள் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அமர்சிங், 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து ஒரு தடை உத்தரவு பெற்றார். 'அந்தத் தடையை நீக்க வேண்டும், உரையாடல் டேப் வெளியிடப்பட வேண்டும்! எனக் கோரி சி.பி.ஐ.எல். எனப்படும் பொதுநல அமைப்பு தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போதுதான், மேற்படி கேள்வியை உச்ச நீதிமன்றம் கேட்டது. போலியான அனுமதிக் கடிதங்களின் அடிப்படையில் பல்வேறு உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தெரியவந்தன.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த 2006 முதல் 2010 வரை ஒன்றரை லட்சம் பேரது தொலைபேசி எண்களைத் தங்களுடைய நிறுவனம் ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, தினமும் 82 பேரது தொலைபேசி உரையாடல்களை அந்த நிறுவனம் ஒட்டுக் கேட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் சார்பில் மட்டுமே ஆண்டுக்கு, 30,000 போன் எண்களை ஒட்டுக்கேட்குமாறு அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் கூறியது.

டெல்லியில் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்​களில் மட்டுமே 3,588 நபர்களது போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.

'போன்களை ஒட்டுக்கேட்பது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியக் கடமை. இது உரிமம் பெறும் ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை மீறினால்,  50 கோடி அபராதம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால், அரசு சொல்லும்படி நாங்கள் ஒட்டுக்கேட்டு தகவலை சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளுக்குத் தருகிறோம்...'' என ரிலையன்ஸ் தெரிவித்தது.

ஒரு தனி நிறுவனம் இத்தனை போன்களை ஒட்டுக் கேட்கும்போது, நாட்டில் உள்ள அனைத்து தொலை​பேசி நிறுவனங்களும் ஒட்டுக் கேட்கும் எண்களின் எண்ணிக்கை தோராயமாக, ஒரு லட்சமாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பார்தி ஏர்டெல் நிறுவனம் 15.25 கோடி சந்தாதாரர்​களுடன் முதலிடத்திலும், 12.57 கோடி சந்தாதாரர்களுடன் ரிலையன்ஸ் இரண்டாம் இடத்திலும், வோடபோன் 12.43 கோடி சந்தாதாரர்களுடன் மூன்றாம் இடத்திலும், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். 8.67 கோடி வாடிக்கை​யாளர்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளன. மற்ற தொலைபேசி நிறுவனங்கள் ஒட்டுக்கேட்டதையும் கணக்​கிட்டால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல லட்சம் பேரது போன் ஒட்டுக் கேட்கப்பட்டு இருக்கலாம்!

மத்திய உளவுத் துறை, ராணுவ உளவுத் துறை, சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை, ஊழல் தடுப்புப் பிரிவு, போதைத் தடுப்புப் பிரிவு மற்றும் போலீஸார் கேட்டுக்கொள்வதற்கு ஏற்ப, இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்து கொடுத்து வருகின்றன. மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை, ''மத்திய அரசின் பல்வேறு புலனாய்வு ஏஜென்சிகள் மூலமாக ஆறாயிரம் முதல் எட்டாயிரம் தொலைபேசிகள் வரை ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இது தவிர, மாநில அரசுகள் சார்பாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன...'' என்று கூறியிருக்கிறார்.

இது அதிகாரபூர்வமான புள்ளிவிவரம். நடைமுறையில் எவ்வளவு போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு இருக்கும்?

'ஒட்டுக்கேட்பது தனிமனித உரிமைக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தபோதிலும், செல்போன் மற்றும் இணைய உரையாடல், தகவல் பரிமாற்றங்களை இடையூறு செய்து பதிவு செய்ய 90 கருவிகளை மத்திய அரசும் மற்ற துறைகளும் வாங்கி உள்ளன.

'தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் என்பது பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்​காணிப்பின் கீழ் இயங்கும் அமைப்பு. இது ஆறு கருவிகளையும், ஐ.பி. எட்டு கருவிகளையும் வைத்​துள்ளது. ஒரு கருவியின் விலை சுமார் ஏழு கோடி ரூபாய். இதைத் தவிர, தனியார் செல்போன் சேவை நிறுவனங்கள் மூலமாகவும் ஒட்டுக் கேட்பு நடைபெறுகிறது. 'இவ்வாறு எத்தனை கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன? என பட்டியல் தயார் செய்ய உளவுத் துறையிடம், உள்துறை அமைச்சகம் கேட்டது. அதன்படி, 'சுமார் 2,000 ஒட்டுக் கேட்கும் கருவிகள் இறக்கு​மதி செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

அரசியல், தொழில் துறை வட்டாரத்தில் செல்வாக்கு மிகுந்த நீரா ராடியா, பல்வேறு தரப்பி​னருடன் தொலைபேசியில் உரையாடிய தகவல்கள் ஊடகங்களில் அண்மையில் வெளியாகின. மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ரகசியமாகப் பதிவு செய்த இந்த உரையாடல்கள், பகிரங்கமாக வெளியாகி இருப்பதற்கு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, ஹெச்.டி.எஃப்.சி. தலைவர் தீபக் பரேக் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ள​னர். 'தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா வழக்கும் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும் இப்போது சேர்ந்துகொண்டது. தனிமனித உரிமை மீறல் என சொல்வது யார்? குப்பன் சுப்பன் இல்லை. அவர்களுக்குத்தான் மனித உரிமையே இல்லையே... சொல்வது டாடாவும், தீபக் பரேக்கும் அல்லவா! உடனே விழித்துக்கொண்டு, 'தொழிலதிபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என பிரதமர் சொல்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தக வார தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், 'தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். வரி ஏய்ப்பு, கறுப்புப் பண மோசடி, நிதி முறைகேடு போன்றவை இதன்மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. எனினும், ஒட்டுக் கேட்கப்படும் தகவல்கள் பகிரங்கமாக வெளியாவது கவலை அளிக்கிறது. ரகசியமாகப் பதிவு செய்யப்படும் டேப்புகளின் விவரங்கள் வெளியாகாமல் இருக்கவும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கவும்... உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரகசியங்களைக் காக்க தொழில்நுட்ப ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!'' என்றார்.

நாட்டின் நலன் கருதி தொலைபேசி உரையாடல்​களை ஒட்டுக் கேட்பது கட்டாயத் தேவை​யாகிவிட்டது என்றால், அந்த அதிகாரத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். ரகசியத்தைப் பாதுகாக்கவும், தனிமனித உரிமைக்கும் அந்தரங்​கத்துக்கும் மதிப்பளிக்கவும் சரியான விதிகளும், வழிகாட்டுதல்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், ஒட்டுக் கேட்புக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் அமெரிக்காவில் உள்ளதுபோல், இதற்கென நியமிக்கப்பட்ட தனி நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் அல்லது நடுநிலை​யான அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசியல் காரணங்களுக்காகவும், சுயநலத்துக்காகவும், தனி நபர்களைப் பழிவாங்கவும் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படாது!

- வழக்கறிஞர் என்.ரமேஷ்

 
1885-ம் வருடத்திய இந்தியன் டெலி​கிராப் சட்டம், பிரிவு 5-ன் கீழ் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இந்தச் சட்டம் சுதந்திரத்​துக்கு முந்தைய சட்டம். தற்போதைய நவீன தொழில்நுட்ப சாதனங்களான செல்போன், இணையம் ஆகியவற்றில் நடக்கும் தகவல் பரிமாற்றங்களை இடையூறு செய்து, அந்தத் தகவல்களைப் பெறுவதற்கும், இதே சட்டத்தின் பிரிவுதான் பயன்படுத்தப்படுகிறது.

'ஒட்டுக் கேட்பு அதிகாரத்தை எப்படி, யார் செயல்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு, வழிகாட்டுதல்களை ஏற்படுத்துவதற்காக எழுந்த கோரிக்கைகளையும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. 'தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது தனிமனித அந்தரங்கத்தில் தலையிடுவது என்றும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதால் தனிமனிதனின் வாழ்வுரிமைக்கு எதிரான செயல் என்றும் குற்றம் சாட்டி, உரிய காரணங்களுக்காக அன்றி தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படக் கூடாது என PUCL (People Union for Civil Liberties) என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக 1996-ல் வழக்குத் தொடுத்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தொலைபேசி ஒட்டுக் கேட்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தேவையான விதிகளையும், வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்று உத்தர​விட்டது. 'அவ்வாறு விதிகள் ஏற்படுத்தப்படும் வரை ஒட்டுக்​கேட்பதற்கான அதிகாரம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என வழிகாட்டுதல்களையும் நீதிமன்றமே வகுத்தது. அதன்படி,

1. இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, 2. நாட்டின் பாதுகாப்பு, 3. வெளிநாடுகளுடனான நட்புறவு, 4. பொது ஒழுங்கு, 5. குற்றம் புரியத் தூண்டுவதைத் தடுக்க ஆகிய காரணங்களுக்காக மட்டும் அந்த அதிகாரத்தை பயன்​படுத்த வேண்டும். மேலும் ஒட்டுக் கேட்பதற்கான ஆரம்ப உத்தரவை அல்லது அனுமதியை மாநில அல்லது மத்திய அரசின் உள்துறைச் செயலர் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வழங்க முடியும். எந்த வகையான தகவல் பரிமாற்றம் ஒட்டுக்கேட்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்​பட வேண்டும். மத்திய அரசில் உள்துறைச் செயலர் சட்டத் துறைச் செயலர் மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஆகியோர் அடங்கிய குழு மட்டுமே, உள்துறை செயலர் வழங்கிய ஆரம்ப உத்தரவைப் புதுப்பிக்க முடியும். அதேபோன்ற குழுவை மாநில அரசும் அமைக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் 1996-ல் தீர்ப்பு வழங்கிய பிறகு இன்று வரை ஒட்டுக் கேட்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்​பாக எவ்வித விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை.

- ஜூனியர் விகடன். 23 பிப்ரவரி 2011






1 உன் வாழ்க்கையை மாற்றும் 6 மார்க்க விடயங்கள்

நீங்கள் தர்மமாக எதை செலவு செய்தாலும், அல்லாஹ் அதற்கு பிரதி கொடுப்பான். [குர்ஆன் 34:39]

2 மன அமைதிக்கான மிக முக்கிய காரணங்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளரின் மன அமைதி என்பது உண்மையான ஈமான், அல்லாஹ் மீதான உறுதி, அவனது விதியை ஏற்றுக்கொள்ளுதல், அவனை அதிகமாக நினைவுகூருதல் மற்றும் அவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் கனியாகும். உள்ளத்தில் அல்லாஹ்வுடனான தொடர்பு எந்தளவுக்கு வலுப்பெறுகிறதோ, அந்தளவுக்கு மன அமைதி அதிகரித்து கவலைகள் குறையும்.

3 இஸ்லாம் என்பது சட்டங்களும் விதிகளும் அல்ல...!

தண்டனைகள் மட்டுமே குற்றச்செயல்களை ஒழிக்கும் அதிமுக்கிய காரணி என்பது இஸ்லாத்தின் பார்வை அல்ல. குற்றம் உருவாகும் காரணங்களை தடுத்து குற்றங்கள் நிகழாமல் காப்பதே மிக முக்கியம்.

4 அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்

ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்

5 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?

மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"

6 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்
7 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
8 ரமலானை வரவேற்கும் துஆ
9 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
10 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
11 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
12 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
13 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
14 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
15 ︎நேர்மை என்பது...
16 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
17 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
18 பாலஸ்தீனத்தின் பெருமை
19 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
20 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
21 உணரப் படாத தீமை சினிமா
22 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
23 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
24 விரக்தி விஷத்தை விட கொடியது
25 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
26 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
27 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
28 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
29 அந்தப் பெண்களாக நாம்...
30 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
31 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
32 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
33 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
34 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
35 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
36 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
37 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
38 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
39 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
40 இளையான்குடியில் உருது மக்கள்
41 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
42 மரணம் நோக்கி...
43 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
44 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
45 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
46 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
47 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
48 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
49 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
50 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
51 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
52 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
53 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
54 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
55 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
56 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
57 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
58 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
59 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
60 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
61 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
62 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
63 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
64 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
65 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
66 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
67 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
68 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
69 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
70 எது வணக்கம்..?
71 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
72 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
73 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
74 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
75 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
76 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
77 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
78 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
79 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
80 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
81 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
82 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
83 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
84 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
85 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
86 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
87 மனைவியை_நேசிங்கள்..
88 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
89 அம்மா! அம்மா!
90 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
91 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
92 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
93 இமாம்களும் மத்கபுகளும்.
94 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
95 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
96 பராஅத் இரவின் சிறப்புகள்
97 வாப்பா!
98 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
99 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
100 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
101 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
102 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
103 இதிலென்ன வெட்கம்?
104 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
105 பழையன கழிதலும் புதியன புகுதலும்
106 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
107 கற்பில் கவனம் தேவை
108 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
109 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
110 இஸ்திஃகாராவின் சிறப்பு
111 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
112 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
113 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
114 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
115 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
116 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
117 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
118 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
119 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
120 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
121 இறுக்கமும் இரக்கமும்
122 இஷா தொழுகையும் இரவு உணவும்
123 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
124 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
125 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
126 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
127 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
128 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
129 பெயர்களை நினைவில் வைப்போம்
130 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
131 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
132 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
133 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
134 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
135 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
136 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
137 ஒரு 2.5 கதை
138 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
139 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
140 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
141 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
142 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
143 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
144 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
145 குறைகளை மறைத்தல்
146 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
147 நல்ல பெண்மணி
148 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
149 💥 யார் அந்த மாமனிதர்..?
150 ஈர்ப்பை விதைப்போம்!
151 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
152 யார் இந்த துலுக்கன்?
153 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
154 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
155 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
156 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
157 நிம்மதி - சிறுகதை
158 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
159    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
160 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
161 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
162  வாழ்க்கை வாழ்வதற்கே !
163 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
164 விற்கப்படும் மார்க்கம்
165 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
166 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
167 பார்வைகள் பலவிதம் !
168 நேர மேலாண்மை / திட்டமிடல்
169 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
170 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
171 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
172 தந்தைகளே! கவனியுங்கள்
173 வரலாறு புகட்டும் பாடம்
174 அல்குர்ஆன் என்னும் மதுரம்
175 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
176 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
177 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
178 நாம் தான் முயல வேண்டும்.
179 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
180 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
181 கற்பா? கல்லூரியா?
182 கசாப்புத் தொழில் சிறந்தது....
183 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
184 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
185 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
186 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
187 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
188 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
189 என் ஹிஜாப் என் உரிமை!!!
190 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
191 முகமாகும் பெண்கள்!!
192 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
193 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
194 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
195 செல்போன்கள்... ஜாக்கிரதை!
196 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
197 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
198 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
199 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
200 ஈமானே-உன் விலையென்ன?
201 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
202 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
203 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
204 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
205 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
206 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
207 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
208 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
209 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
210 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
211 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
212 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
213 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
214 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
215 அறிவைத் தேடுவோம்!
216 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
217 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
218 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
219 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
220 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
221 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
222 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
223 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
224 “வேர்கள்” வரலாறு!
225 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
226 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
227 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
228 மனிதனின் தேவை ! – மன அமைதி
229 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
230 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
231 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
232 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
233 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
234 பேச்சு,மெளனம்
235 ஜனாஸா - மைய்யத்
236 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
237 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
238 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
239 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
240 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
241 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
242 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
243 வலிமார்கள் என்பவர்கள் யார்?
244 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
245 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
246 மனித குல விரோதி
247 எனது பெயர் ஜனாஸா!
248 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
249 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
250 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
251 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
252 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
253 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
254 தமிழரும் இசுலாமியரும்
255 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
256 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
257 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
258 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
259 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
260 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
261 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
262 கற்பனைகளும் இஸ்லாமும்
263 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
264 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
265 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
266 மது ஒரு பெரும் பாவம்
267 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
268 பெற்றோர்களைப் பேணுவோம்!
269 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
270 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
271 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
272 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
273 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
274 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
275 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
276 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
277 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
278 மறுமை வாழ்வை நேசிப்போம்!
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
280 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
281 சுதேசி சிந்தனைகள்.......
282 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
283 கல்வி நல்லோர்களின் சொத்து!
284 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
285 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
286 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
287 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
288 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
289 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
290 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
291 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
292 அறிவைத் தேடுவோம்!
293 ஆக்காதீர் ஆசனங்களாக
294 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
295 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
296 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
297 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
298 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
299 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
300 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
301 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
302 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
303 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
304 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
305 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
306 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
307 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
308 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
309 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
310 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
311 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
312 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
313 விசுவரூபம் ஒரு விளக்கம்
314 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
315 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
316 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
317 கண்ணாடிகள் கவனம்
318 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
319 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
320 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
321 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
322 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
323 கருத்து வேறுபாடுகள்.
324 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
325 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
326 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
327 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
328 ஓ! என் இளைய சமுதாயமே!
329 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
330 வீண் செலவு வேண்டாமே