Tamil Islamic Media

ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....

பிறர் கருத்துகளை திருடாமல் தங்களது சுயக் கருத்துக்களைக் கொண்டே எழுதவேண்டும் என்ற தூயவிதியை இஸ்லாமியர்கள் தான் இந்த உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார்கள்.


ஆனாலும் வளர்ச்சியின் உச்சி நுகர்ந்தவர்கள் நாங்கள் என்று கூறித் தங்களை மாறுத்தட்டிக்கொண்டு நம்மை வளர்ச்சியடையவில்லை என்றுத் தூற்றிக் கொண்டும் இருக்கிற ஐரோப்பியர்கள் இதனை என்றைக்கும் கடைபிடித்ததேயில்லை.

சமூகவியலின் தந்தை என்று போற்றப்படுகின்றவர்,
டேவிட் எமைல் டுர்கைம் ஆனால் உண்மையிலேயே அந்த துறையை நிறுவியவர் இப்னு ஹல்தூன் என்ற முஸ்லிம் அறிஞர் தான்.ஆனால் இவரது கருத்துகளைக் கொண்டுத் தான் நான் ஆய்வுச் செய்தேன் என்று எந்த இடத்திலும் டேவிட் குறிப்பிடவேயில்லை.

இயக்க விதிகளை கண்டுபிடித்தது ஐஸக் நியுடன் என்கிறோம், ஆனால் அவருக்கு முன்பே அறிஞர் இப்னு ஸீனா அறிஞர் ஹிபதுல்லாஹ் இப்னு மல்கா ஆகிய இருப்பெரும் முஸ்லிம் அறிஞர்களே முதலில் அதனை கண்டுப்பிடித்தனர்.
ஆனால் இந்த இரு அறிஞர்களது கண்டுபிடிப்புகளை மையமாக வைத்து தான் தனது ஆராய்ச்சி அமைந்துள்ளதாக எந்த இடத்திலும் நியுடன் கூறியதாக வரலாறு இல்லை.

ராஜர் பேகனின் சிலப் புத்தகங்களில் இடம்பெற்ற அத்தியாயங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம் அறிஞர் இப்னுல் ஹைஸம் அவர்களது முனாளர் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து விஷயங்கள் தான். ஆனால் அவர் அதனை அப்படியே தனதுக் கருத்துப் போல் தான் கூறியிருப்பாரே தவிர இது இப்னுல் ஹைஸம் அவர்களது வரிகள் என்ற மேற்கோள்கள் எல்லாம் காணவே இயலாது.

'ஹலாரத்துல் அரபு' என்ற புத்தகத்தின் ஆசிரியர் கஸ்தவே லீபான் தனது புத்தகத்தில் கூறுகிறார் அறிவியலின் அடிப்படை கூறுகளான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு என்ற இந்த இருப் பெரும் முறைகளை முதலில் கண்டுபிடித்தவர் ராஜர் பேகன் தான் என்றுக்கூறியப்பிறகும் ஆனாலும் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆணி வேர் அரபுகள் தான் என்று நிறைவுச் செய்கிறார். .அரபுகளின் ஆக்கங்களை, புத்தகங்களை படிக்கும் அனைத்து அறிஞர்களுமே இந்த விஷயத்தை ஒப்புக்கொள்வார்கள்.

ஆனால் அதே நேரத்தில் அரபுகள் தங்களது புத்தகங்களில் மற்ற யாராவதுடைய கருத்தை அரபுகள் மேற்கோள் காட்டினார்கள் என்றால் அதை யாருடைய கருத்து என்று தெளிவாக பதிவுச் செய்திருப்பார்கள் அதோடு அவர்களது பணிவையும் வெளிப்படுத்தியிருப்பார்கள்.இது ஹிப்போகரட்ஸ் உடைய கூற்று இது கேலனுடைய கூற்று இது சாக்ரடீஸ் உடைய கூற்று என அவர்களுக்கு செலுத்தியாக வேண்டிய மரியாதையைச் செலுத்தியிருப்பார்கள்............

அரபி மூலம் : ராகிப் ஸர்ஜானீ
இஹ்திராமுல் மலக்கியத்தில் ஃபிக்ரியத்தில் ஃபி ஹளாரத்தில் இஸ்லாமியா.
தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி








No articles in this category...