அல்குர்ஆன் என்னும் மதுரம்
அல்குர்ஆனை அல்லாஹ்வின் வேத வார்த்தையாக பார்க்கிற நாம் அதை ஏற்றிப்போற்றுகிறோம். ஆனால் அந்தோ அந்த அல்குர்ஆன் நமக்கு படைக்கும் விருந்துகளை நாம் அறிந்தவர்களாக இருக்கிறோமா..
உலகில் இது வரை ஒரு வாழும் மறையாகவும் உலக சவாலாகவும் அல்குர்ஆன் திகழ்கிறது எனபதற்கோர் சிறு நிகழ்வு இதோ உங்கள் சிந்தனைக்கு
அரபு உலகின் சிந்தனையாளர்களுள் ஒருவரான அல்லாமா தன்தாவீ ஜவ்ஹரீ � இவர் எழுதிய தப்சீர் ஜவாஹிருல் குர் ஆன் (குர் ஆனின் முத்துக்கள்) - புகழ்பெற்ற ஒன்றாகும். அல்லாமா தன்தாவீ தன் பயண அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொள்கிறார்.
நான் ஒரு முறை ஜெர்மனிக்கு போயிருந்தேன். அங்கே எனது மேற்கத்திய நண்பர்கள் சிலருடன் அளவளாவிக் கொண்டிருந்தேன், அவர்கள் அரபு மொழியை நன்கு கற்றுத்தேர்ந்தவர்கள்.
பேச்சின் ஊடே அதில் உள்ள ஒரு அறிஞர் என்னிடம் கேட்டார் : நீங்கள் பிற முஸ்லிம் அறிஞர்களைப்போல குர்ஆன் தன் மொழியில் இலக்கண இலக்கிய நயத்தால் ஒரு (முஃஜிஸா) பேரற்புதம் எனக் கருதுகிறீர்களா?
நான் கூறினேன் �ஆம்� என்று, அவர் வியப்புற்று உங்களைப்போன்ற முற்போக்கு சிந்தனையும், விவேகமும் கொண்ட ஒருவர் கண்மூடித்தனமாக நம்பிக்கை கொண்டிருப்பது எனக்கு விந்தையாகவேப்படுகிறது என்றாரவர்.
இதில் என்ன விந்தையிருக்கிறது என்று கூறிய இவர்களுக்கு ஒரு பாடம் நடத்தவேண்டும் என்ற ஆவல் தோன்றியது. உடன் நான் கூறினேன் இது ஒரு அறிவுசார்ந்த பிரச்சனை இது முஹம்மது நபி காலத்தில் மட்டும் உண்டானது இல்லையே இப்பொழுது வேண்டுமானாலும் இங்கே ஒரு சோதனை செய்யலாம் என்று நான் கூறியதற்கு அத்துணை பேரும் ஆவலோடு தலை அசைத்தனர்.
உடன் நான் கூறினேன் நரகம் மிக விசாலமானது என்பதற்கு உங்கள் இலக்கிய அறிவுகளை பயன்படுத்தி ஒரு வாசகம் கூறுங்கள் என்று சொன்னேன்.
உடன் அவர்கள் பல்வேறு யோசனைக்கு பின் �� ���� ������ �� ���� ������ (இதன் பொருள் நரகம் மிக விசாலமானது) என்ற வாசகங்களை கொண்டு வந்தனர். நான் கூறினேன் இன்னும் உங்கள் இலக்கிய ஞானங்களை பயன்படுத்துங்கள். மீண்டும் யோசிக்க அவகாசம் தருகிறேன் என்று கூறினேன்.
அவர்கள் கூறலானார்கள் நாங்கள் மிகுந்த யோசனைக்கு பின் தான் இவற்றை பொருள் சொறிந்த வாசகங்களாக இங்கு கொண்டு வந்துள்ளோம்.
உடனே நான் கூறினேன் இப்பொழுது அல்குர்ஆனில் அல்லாஹ் இதே கருத்தை எவ்வளவு அழகாகவும் வியக்கத்தக்க முறையிலும் கூறியுள்ளான் என்று ஆரம்பித்ததும் அவர்கள் ஆர்வமாக கேட்கலானார்கள்.
ஸூரத்துல் �காஃப்� னின் ஒரு வசனத்தை ஓதினேன் அதில் இறைவன் நரகத்தைப்பற்றி குறிப்பிடுகின்றான்.
��� ���� ����� �� ������ � ���� �� �� ����
அன்றைய தினம் நாம் நரகத்தை நோக்கி உனது வயிறு நிரம்பிவிட்டதா ? என்று கேட்போம் அது இன்னும் இருக்கிறதா? என்று கேட்கும்.
ஒரு நிகழ்வை எவ்வளவு இலக்கிய ரசணையோடு இந்த வசனம் படம் பிடித்துக்காட்டுகிறது என்பதை அறிந்த உடன் ஆச்சிரிய மேலிட்டால் ஈமானை ஏற்றார்கள், முரண்டுபிடிப்பவர்களைக்கூட முஃமினாக மாற்றிய ஒரு வசனம் உண்மையில் ஒரு வாழும் அற்புதம் அல்லவா.
ஆகயால் உயிருக்குயிரான உயிரினும் மேலான நாகயம் திருமேனி அருளினார்கள்:
திருக்குர்ஆன் அனைத்துப் பொருட்களை விட மிகச் சிறந்தது, எவர் திருக்குர் ஆனை கண்ணியப்படுத்துகிறாரோ அவர் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தியவராவார். எவர் திருக்குர் ஆனை அலட்சியமாகக் கருதுகிறாரோ அவர் அல்லாஹ்வை அலட்சியமாக கருதியவராவார்.( ஹதீஸ்)
இன்னுமோர் ஹதீஸ் இப்படி சுட்டுகிறது:
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறினார்கள் : உங்களுக்கு இரண்டு நோய் நிவாரணிகளை அறிவிக்கிறேன் 1. அல்குர்ஆன் 2. தேன். (ஹதீஸ்)
மேலே உள்ள சம்பவத்தில் எப்படி குர்ஆன் மனதில் உள்ள நோய்களை போக்கியது என்று நிலையை தத்ரூபமாக பார்த்தோம்.
உண்மையில் அல்குர்ஆன் மனநோய்களை (psyacik, Tenson, anxcity) போக்குவது போல உடல் நோய்களை ( Psycal illness) போக்குகிறது, தேன் உடல் நோய்களைப் போக்குவது போல் மனநோய்களையும் போக்குகிறது.
வல்ல அல்லாஹ் இந்த உண்மைகளை உணர்ந்து குர்ஆனை அதன் ஆழிய கருத்துக்களை அறிந்து ஓதி அதன் முழுப்பயனையும் உள்வாங்குகிற நல்ல வாய்ப்பை தருவானாக.
- Moulana Moulavi Mohamed Ismail Hasani
No articles in this category... |