பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்

அபூ உமாமா அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் அல்லாஹ்வுக்காக பிரியம் கொள்கிறாறோ , அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வானோ, அல்லாஹ்வுக்காக கொடுப்பானோ, அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருப்பனோ அவர் பரிபூரண ஈமானை பெற்றுக்கொண்டவராவர்
 
 
விளக்கம்: இந்த ஹதீஸின் மூலம் நாம் பெறும் பாடம் எவ்விதமான செயல்களை நாம் செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல எந்த நோக்கத்தில் செய்கிறோம் என்பது தான் முக்கிய அம்சமாகும். ஆகவே தான் புஹாரியில் முதல் ஹதீஸ் இன்னமல் அஃமாலு பின்நிய்யாத் ( செயல்கள் எண்ணங்களைப்பொறுத்தே அமைகின்றன) இதன் கருத்து கொடுக்காமல் இருப்பது கொண்டு உலகம் நம்மை கெட்டவன் என்று சொல்லலாம் ஆனால் நாம் இறைவனுக்கென்று நாட்டம் கொண்டு (உண்மையான காரணத்தோடு) செயல் பட்டால் அது போற்றுதலுக்குரியதாக ஆகும் . இன்னும் அது போன்ற ஒரு செயலை நாம் செய்து அதற்காக உலகம் பழித்தாலும் நாம் கவலை அடையவேண்டியது இல்லை. (இதன் முழுமையான பொருளை அல்லாஹ்வும்,அவன் தூதரும் தாம் மிக்க அறிந்தவர்கள்)


No articles in this category...