Tamil Islamic Media

சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது

என் பெயர் விடுதலை !

தேச விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922  இல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் ஆவேசமாக மக்கள் மத்தியில் பேசுகிறான். விடுதலை உணர்வை; தூண்டும் அந்த மழலைக் குரல் ஒலிக்கும் இடமெல்லாம் மக்கள் திரளாகக் கூடினர். துகவல் ஆங்கிலேயருக்கு செல்கிறது. அந்த 11 வயதுச் சிறுவனைக் கைது செய்து இன்று பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். அச்சிறுவன்தான் கைர் முகம்மது.

நீதிமன்ற கூண்டிற்குள் தலை மட்டும் வெளியே தெரியும்படி நின்ற கைர் முகம்மதுவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நீதிபதி

நீதிபதி : உன் பெயர் என்ன?
கைர் : ஆஸாத் (ஆஸாத் என்றால் விடுதலை என்று பொருள். கைரிடம் இருந்து உறுதியுடன் வெளிவந்த பதில் நீதிபதியை நிமிர்ந்து உட்கார வைத்தது.)
நீதிபதி : சரி உன் தந்தையின் பெயர் என்ன?
கைர் : இஸ்லாம் !
நீதிபதி : உன் ஜாதி எது?
கைர் : ஒத்துழையாமை! (கைரின் பதில்களால் சற்றே எரிச்சல் அடைந்த நீதிபதி தொடர்ந்து கேட்கிறார்)
நீதிபதி : உனது தொழில் எது?
கைர் : அரசுக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டுவது (ஒரு முதியோனுக்குரிய கம்பீரத்துடன் பதிலளிக்கிறான்.புரட்சியைத் தூண்டுவது (Sedition) என்பது அன்று பெரிய குற்றம் ராஜதுரொகமாகும்.)
நீதிபதி : உன் பிணையாள் (Surety) யார்?
கைர் : எனது பிணையாள் அல்லாஹ் ஒருவன் தான்(இப்பதிலைக் கேட்டு அதிர்ந்து போன நீதிபதி சிறுவன் என்பதால் சற்று இரக்கத்துடன் )
நீதிபதி : உன் செயலுக்கு நீ மன்னிப்பு கோருகிறாயா?
கைர் : ஒரு குற்றமும் செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத்தானே செய்தேன்?( என்று தார்மீக உணர்வுடன் அவன் நீதிபதியைத் திருப்பிக் கேட்க மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டதால் கைருக்கு சில மாதங்கள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்குகிறார்.)*
சிறுவன் கைர் முகம்மதுவின் பதில்களில் வெளிப்பட்ட ஆன்மீகப்பிடிப்பும் விடுதலை உணர்வம் நம்மை ஆச்சர்யத்துடன் அள்ளிக்கொண்டு போகிறது.(* டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை(அபூஹாரிஸ்), நீதி விசாரணை. சுpந்தனைச்சரம், அக்டோபர் 1997.)

பாடலியில் ஒரு புலி

1857  சிப்பாய் கலகம் வட இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலகட்டம் முக்கிய நகரங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டு யாரும் வெளிவரக்கூடாது என்ற தடை உத்தரவினை ஆங்கில அரசு விதித்திருந்தது. ஒரு நாள் பாடலிபுரம் நகரில் பீர்அலி என்ற இளைஞனின் வீட்டின் முன் தடை உத்தரவை மீறி 200 முஸ்லிம்கள் கூடுகின்றனர்.

கூடிய மக்கள் முன் பீர்அலி எழுச்சிமிக்க உரையாற்றுகிறார். பின்னர் அனைவரும் தேசியக் கொடியைக் கையிலும், விடுதலைக் கோசத்தை நாவிலும் ஏந்தியவர்களாக ஊர்வலமாப் புறப்படுகின்றனர். ஊர்வலத்தினரைக் கைது செய்ய ஆங்கில அதிகாரி லயால் ராணுவத்துடன் வருகிறான். ஊர்வலத்தை வழிமறித்த லயாலை பீர்அலி சுட்டு வீழ்த்துகிறார். நகரெங்கும் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. பீர்அலி கைது செய்யப்படுகிறார்.

ராணுவக் கோர்ட்டில் பீர்அலிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இறுக்கிப் பூட்டப்பட்ட விலங்குகளால் அவர் கைகளிலிருந்து ரத்தம் கசிய இழுத்து வரப்பட்டு தூக்கு மேடையில் நீறுத்தப்படுகிறார். ஒரு பிறவி வீரனுக்குரிய புன்முறுவலுடன் தூக்குமேடையில் நின்ற பீர்அலிக்கு தன் குழந்தையின் ஞாபகம் வர ஒருகண நேரம் அவர்முகத்தில் சோகம் படர்கிறது. இதனைக் கவனித்த அதிகாரிகள், இதுதான் தக்க சமயம் என்று பீர்அலியை, �பீர்அலி� கிளர்ச்சித் திட்டத்தில் இறங்கியுள்ள மற்ற தலைவர்களின் பெயர்களை நீ இப்போது வெளியிட்டால், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்!� என்றனர்.

அதற்கு மறுத்த பீர்அலி, நீங்கள் இப்போது என்னைத் தூக்கிலிடலாம். என் போன்ற பலரையும் தூக்கிலிடலாம். ஆனால் எங்களுடைய லட்சியத்தை நீங்கள் ஒரு காலத்திலும் தூக்கிலிட முடியாது. நான் இறந்தால் எனது ரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் உதித்து உங்கள் சாம்ராஜயத்தையே அழித்து விடுவார்களென்பது நிச்சயம்! - என்று தன் தேசத்தின் எதிர்கால விடியல் கனவைத் தன் இறுதி மூச்சில் வெளிப்படுத்தியவாறு தூக்கு கயிறை முத்தமிடுகிறார்.

பீர் அலியின் மரணச் செய்தி கேட்டு தனபுரி ராணுவ முகாமில் இருந்த இந்தி சிப்பாய்கள் ஜுலை 25-ஆம் தேதி மிகப்பெரும் புரட்சியை ஆரம்பித்தனர். பீர் அலி லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். பாடலிபுரத்தில் புத்தக வியாபாரம் செய்து வந்தார். பாடலிபுரத்தில் தேசபக்தர்களைத் திரட்டி ஆயதங்களுடன் அத்தேசிய வீரர்களைத் தயார் செய்து வைத்திருந்தார். �எந்த நேரத்திலும் தேசவிடுதலைக்காக தங்கள் உயிரையும் இழப்போம்� என்று அனைவரும் பீர் அலியிடம் சத்யப்பிரமாணம் செய்திருந்தனர். பீர்அலியின் மரணத்திற்குப் பின் இவ்வீரர்கள் பாடலிபுரம், தனபுரி பகுதிகளில் ஆங்கிலேயர்களைப் பழிவாங்கும் மிகப்பெரும் கிளர்சிசியில் ஈடுபட்டனர்.* (* வீரசாவர்க்கர்,எரிமலை, பக்கம் 272-274).

தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு !ஆயுதப்புரட்சி ஒன்றுதான் இந்திய மண்ணில் விடுதலையை வரவு வைக்க ஒரே வழி என்ற முடிவுடன் உத்திரப்பிரதேசத்தில் வலுவான ஓர் இளைஞர் அமைப்பு உருவானது; சுதந்திரநாத் சனயால், போகேஷ்பாபு, ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற, இவிவளைஞர் அமைப்பின் துவக்க கர்த்தாக்களில் ஒருவர் ஷாஜஹான்பூரைச் சார்ந்த அஷ்பாகுல்கான் என்ற இளைஞர் ஆவார். ஆங்கிலெயருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் வலுவான இளைஞர் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவ்விளைஞர்களுக்கு, ஆயுதங்கள் வாங்கப் பணவசதி தேவைப்பட்டது. அதற்காக அரசாங்க கஜானாக்களைச் சூறையாடத் திட்டம் வகுக்கப்பட்டது.

1925 ஆகஸ்ட் 26 � இல் உத்திரப்பிதேசத்தில் சஹான்பூரிலிருந்து லகனோவிற்கு அரசாங்க கஜானாப் பணம் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் தகவல் இவர்களுக்குக் கிடைக்கிறது. கஹோரி கிராமத்தில் அந்த ரயிலைத் தடுத்து நிறுத்தி கஜானாப் பணத்தைச் சூறையாட அஸ்பாகுல்லாகான், ராம் பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர  ஆஸாத், ரோஷன்சிங், ராஜேந்திர லால்hP ஆகியோர் தலைமையில் ஓர் இளைஞர் குழு புறப்படுகிறது.

கஹோரியில் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டு கஜானாப் பணம் சூறையாடப்படுகிறது. இதன் விளைவாகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கையில் ஆங்கில அரசு இறங்குகிறது. தெஹ்லீ என்னும் இடத்தில் அஸ்பாகுல்லாகான் கைது செய்யப்பட்டார். லாகூரில் 18 மாதங்கள் நடைபெற்ற விசாரணையில், இவர் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பி ஓட முயன்றவர், கஹோரி கொள்ளையில் ஈடுபட்டவர் போன்ற ஐந்து குற்றங்களை அஸ்பாகுல்லாகான் மீது சுமத்தி, தூக்குத்தணடனை வழங்கியது நீதிமன்றம்.

சில நாளே ஜீவித்திருப்பேன். என் தேசத்தின் ஒரு பிடிமண்ணை என் கபணாடை(சவத்துணிக்குள்)க்குள் வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள்!.
- என்ற பொருள் பொதிந்த கவிதையை எழுதி வைத்தவராக� லெப்பைக்க என்ற ஹஜ் பயணிகளின் தாரகமந்திரத்தைச் சப்தமாக முழங்கியவராக� குர்ஆனின் உரையைக் கையில் ஏந்தியவராக � 26-09-1926- இல் தூக்கு கயிற்றில் தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் அஸ்பாகுல்லாகான்.* இந்திய விடுதலைப் போராட்ட தீவிரவாத இயக்கத்தின் முன்னோடி ஆவார். (*ஏ.என். முஹம்மது யூசுப், இந்திய விடுதபை; பொராட்ட வீரர்கள், பக்கம்.223-224.)

தியாக இயக்கத்தினரின் வரிசையில்
You give me blood and I will give you Freedom
என்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேசவிடுதலைக்காக ரத்தம் சிந்த அழைப்பு விடுவித்த போது, அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army) நுற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தனர். பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் வியாபாரங்களிலும் தொழில்களிலும் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் அவரது ராணுவத்தில் இணைவதில் முந்திக்கொண்டனர்.

நேதாஜி 1943 ஜுலை 2 � இல் சிங்கப்பூரில் ஆரம்பித்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் என்ற தற்காலிக சுதந்திர இந்திய அரசாங்கத்தின் மந்திரி சபையில் ராணுவ பிரதிநிதிகளாக லெப் கர்னல்ஸ் அஸீஸ் அஹமது, எம்.இஸட்கியானி, இஷான் காதிர், ஷாநாஸ்கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.* மேலும் கரீம் கனி, டி.எம்.கான், ஹபிபுர்ரஹ்மான் ஆகியோரும் லெப்.கர்னல்ஸ் ஆகப் பணியாற்றியுள்ளனர்.
இதில் லெப். கர்னல் ஹபிபுர்ரஹ்மான் தான் நேதாஜியின் இறப்பு பற்றி உறுதி செய்யும், �விமான விபத்து நடந்தது உண்மைதான்� என்று கூறியவர்.**

பிரிட்டீஷாரால் சுரண்டப்பட்டு, அவ்வாறு சுரண்டுவதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே எழுத்தறிவின்றி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பட்டினி இந்தியர்களின் நிலை கண்டு இரங்கி, தனது உறவினரில் தந்தை முதற்கொண்டு 80 பேர் பிரிட்டீஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிக் கொணடிருந்த நேரத்தில், தேசவிடுதலைக்காக நேதாஜி படையில் இணைந்தவர்தான் ஷாநவாஸ்கான்.

1945 � ஆம் ஆண்டு நவம்பர் 5- ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டெல்லி செங்கோட்டையில் ஆரம்பமானது. இவ்விசாரணையில் முதலில் உட்படுத்தப்பட்ட மூவருள் ஒருவர் ஷாநவாஸ்கான் ஆவார். மற்றிருவர் கேப்டன் ஸேகால், லெப். தில்லான். இவர்களுக்காக ஜவஹர்லால நேருவும், ஆஸிப் அலியும் வாதாடினர்.
இவ்விசாரணையின் போது ஷாநவாஸ்கான் அளித்த வாக்குமூலம் அன்று தேசம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. �இந்த விசாரணையை பிரிட்டீஷ் அரசு நடத்தியிருக்கக்கூடாது� என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் எழுதும் அளவிற்கு, ஷாநவாஸ்கானின் சாட்சியங்கள் போராட்ட நியாயங்களை உறுதி செய்வனவாக அமைந்தன.***
இவ்வழக்கு விசாரணையில் முதன் முதலாக இந்திய தேசிய ராணுவ வீரர் ஒருவர் 23-08-1945-இல் தூக்கிலிடப்பட்டார். அந்த வீர இளைஞனின் பெயர் ஷாகுல் ஹமீது. (* கே. அருணாசலம், ஜெய்ஹிந்த்,பககம்67) (**மேற்படி அணிந்துரையில் INA லெப்.கர்னல்.லட்சுமி)ஷ (***மேற்படி பக்கம் 91.)

வைக்கம் வீரன்
இந்திய தேசிய ராணுவத்தின ஒற்றர் படைப்பிரிவு மலேசியாவிலுள்ள பினாங்கு தீவில் இயங்கி வந்தது. �நாட்டிற்கு உழைப்பதனால் எந்த சொந்த லாபத்தையும் நான் பெறமாட்டேன். இந்தியர்கள் யாவும் என் சகோதரர்கள்� � என்ற உறுதி மொழியினை எடுத்துக்கொண்ட, இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் உயிரையும் கொடுக்கத் தயாரான இளைஞர்கள் அந்த ஒற்றர் படையில் இருந்தனர்.

இந்த ஒற்றர் படையின் முதல்கட்ட நடவடிக்கையாக ஐந்து ஒற்றர் படை வீரர்கள் கேரளாவின் கோழிக்கோடு அருகிலுள்ள தண்ணூர் கடற்கரையில் 27-12-1942- இல் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் வந்திறங்கினர். இதே நேரத்தில் பர்மாவில் இருந்து அரகடகன் வழியாக மற்றொரு குழு இந்தியாவிற்குள் நுழைந்தது. இவ்வீரர்கள் தங்களது பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வரும்போது சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அனைவரும் கைதானர்.

இந்த ஒற்றர்படை வழக்கில் ஐந்தாண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனைப் பெற்ற 14 பேருள் தமிழ்நாடு கீராம்பூரைச் சேர்ந்த முஹம்மது கனி என்ற இஸ்லாமிய இளைஞரும் உண்டு. மா.சு. அண்ணாமலை*
சென்னை கோட்டையில் விசாரிக்கப்பட்டு அனைவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி மாக், ஐவருக்கு மரணதணடனையும் 14 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கினார். இதில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஃபேரேரா என்ற வீரர் மட்டும் சில சட்டச் சிக்கல்கள் காரணமாகத் தண்டனையில் இருந்து தப்பினார். மரண தண்டனைப் பெற்ற மற்ற நால்வர் : வைக்கம் அப்துல் காதர், பவுஜாசிங், எஸ்.சி.பரதன், ஆனந்தன். (* மா.சு.அண்ணாமலை, சும்மா வரவில்லை சுதந்திரம். தினமணிச்சுடர்.4.8.1996.,பக்கம்.9)

1943 � ஆம் ஆண்டு செப்படம்பர் 10-ஆம் தேதி அதிகாலை இந்நால்வருக்கும் தூக்கு. தூக்கிற்கு முந்திய நாள் இரவு வைக்கம அப்துல் காதர் தேசத்து மக்களுக்கு எழுதிய மடல்:

அமைதியையும் நிர்மலமான மனதையும் அல்லா எனக்கு தந்துள்ளார். நாட்டுக்காக நான் என் வாழ்வை இழக்கிறேன். நீங்கள் உங்கள் மகனான என்னை இழக்கிறீர்கள். நாளை காலை இந்த உயிர் நின்றுவிடும். இந்த கரங்கள் எழுதாது. இதயம் துடிக்காது. ..நாட்டிற்காக உயிரை விட்ட முழு நிலவினைப் போன்றவர்கள் முன்பு நான் மிகச் சிறிய மெழுகுவர்த்தி ரம்சான் 7- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5-மணிக்கும் 6-மணிக்கும் இடையே நான் மரணம் அடைவேன். இதோ கடிகாரம் 12 அடிக்கிறது. என் மரணத்தின் முதல் கட்டம் ஆரம்பித்து விட்டது. என்றேனும் ஒருநாள் உங்கள் மகன் இந்த தேசத்திற்காகத் தைரியத்துடன் மரணத்தைச் சந்தித்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள் !

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாள்� சென்னைச் சிறைச்சாலைக் கைதிகள் அனைவரும் �வந்தே மாதரம்� பாட, வைக்கம் அப்துல் காதர் தன்னோடு தூக்கில் ஏற்றப்படும் மூவருடன் �பாரத மாதாகி ஜே� என்ற கோசத்துடன் தூக்கு மேடை நோக்கி நடக்கிறார். அப்துல் காதரிடம் �உனது இறுதி விருப்பம் என்ன?� என்று கேட்கப்படுகிறது. அதற்கு அப்துல் காதர் : இந்து மதத்தைச் சார்ந்த என் நண்பர் ஆனந்தனையும் என்னையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும்! மதங்கடந்த மனிதநேய உணர்வுடன் இம்மண்ணிற்காய் தூக்கிலேரிய அத்தியாகியின் உடல் ஒட்டேரி மைதானத்தில் புதைக்கப்பட்டது.*

தூக்கு கயிற்றின் கண்ணிகளுக்குள் தங்கள் கழுத்துக்களை அரும்புகளாய்த் தொடுத்து, இந்திய தேசத்திற்கு சுதந்திர மாலையான அத்தியாக மலர்களில் வைக்கம் அப்துல் காதர் இந்திய விடுதலை வரலாற்றை வாசப்படுத்தியவர். இனி அவரையும் வைக்கம் வீரன் என்று அழைக்கலாமே ! 


No articles in this category...