பட்டாடை

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ல்லம் அவர்கள் கூறியதாக அன்ஸ் ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் : உலகில் பட்டாடை அணிந்தவர் மறுமையில் அதை அணியமாட்டார்.
( இது ஆண்கள் விஷயமாக் சொல்லப்பட்ட ஒரு ஹதீஸாகும்.பெண்கள் பட்டாடை அணிவது மார்க்கதில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.
 
இது இறைவனால் நமக்கு மறுமை நாளில் வழங்கப்பட இருக்கிற சன்மானமாகும், இந்த விஷயத்தில் எவர் ஒருவர் முந்திக்கொண்டு அதை உலகில் பயன்படுத்துவாரோ அவருக்கு மறுமையில் அது வழங்க்கப்படாது அல்லாஹ் ஒரு ஆயத்தில் சுவனவாசிகளின் நிலைப்பற்றி மிக தெளிவாக கூறுகிறான்)
ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும். (22:23)


No articles in this category...