Tamil Islamic Media

ஈமானின் கிளைகள்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஈமான் எழுபது சொச்சம் கிளைகளை கொண்டதாகும். அதில் மிகச்சிறந்தது லாயிலாஹ இல்லாஹ் என்று சொல்லுவதாகும். அதில் மிக கடைசியானது நடைபாதையில் தொல்லைத்தரும் பொருடகளை அகற்றுவதாகும். வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்.  
 

 இந்த ஹதீஸில் ரஸுலுல்லாஹி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஈமானில் பல கிளைகளைப்பற்றி கூறிப்பிடுகின்றார்கள். ஆனால் இந்த கிளைகள் யாவை என்று ஹதீஸ்களின் செய்திகள் இடம்பெறவில்லை. ஆனால் ஹதீஸ்கலை வல்லுனர்கள் பல்வேறு வித விளக்கங்களைத்தருகிறார்கள் ,

 

இதில் உயர்ந்த நிலையில் கலிமத்தய்யிபா உள்ளது அதாவது நம் வணக்கத்திற்குரியவனாக அல்லாஹ் இருக்கிறான். இன்னும் அவன் தான் ராஸிக்காக (நம் சகல தேவைகளை பூர்த்திசெய்பவனாக) ஹாலிக்காக ( படைத்து பரிபக்குவப்படுத்தி ரட்சிப்பவனாக) மாலிக்காக ( நம் எஜமானனாக) இருக்கிறான். கடைசி நிலையாக தொல்லை தரும் பொருளை அகற்றுவது என்று கூறுகிறார்கள். இதிலிருந்து இடையில் உள்ள படித்தரங்கல் வெறும் பள்ளியோடும், முஸல்லாவோடும் மட்டும் தொடர்புடையவை அல்ல என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது . நம் தினசரிவாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளின் இந்த ஈமானிய கிளைகள் என்பது ஆழ்ந்த தாக்கத்தை பதிதுள்ளது என்பது மட்டும் விளங்குகிறது.

  அல்லாஹுவும் அவனது ரஸுலுமே இவ்விஷத்தில் நன்கு அறிந்தவர்கள், வல்ல ரஹ்மான் சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் வழியில் நடக்கிற நஸிபைத்தருவானாக, அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதைவிட்டு தூரமாகிற நஸிபைத்தருவானாக ஆமீன்






No articles in this category...