அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர் மூவர் 1. இஸ்லாமிய போர்வீரன் 2. ஹஜ் செய்பவர் 3. உம்ரா செய்பவர்.

 இந்த ஹதீஸில் வப்துல்லாஹ் என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளார்கள். வப்து என்று சொன்னால் (Delegation /Deputation ) அரசு முறை விருந்தாளியாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பிரயாணிப்பவர், பொதுவாக இவ்வார்த்தை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்க்கு செல்லு அரசு குழுவிற்கு சொல்லப்படும்.அவர்கள் அரசனை சந்திப்பதற்கோ அல்லது ஒரு தலைவரை சந்திப்பதற்குகோ செல்லும் குழுவினர் ஆவர்.

 இந்த ஹதீஸில் உள்ள மூன்று பேரும் அல்லாஹ்வின் பாதையில் செல்லக்கூடியவர்கள், அவர்கள் இறைவனின் விருந்தாளிகள் இவர்களுக்கு தக்க மரியாதை தரவேண்டியது ஒவ்வொருவரின் கடமை. எப்படி ஒரு அரசு முறை குழுவினருக்கு ரெட்கார்பேட் வரவேற்பு அளிக்கபப்டுகிறதோ அப்படித்தான் இவர்களும் மரியாதைக்கு உரியவர்கள்.

 ஆகையால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹஜ்ஜிலிருந்து திரும்பி வருபவர்களை சந்தித்து அவர்களிடம் து ஆ செய்ய வேண்டுமாறு நமக்கு கட்டளையிட்டார்கள். ஹதீஸில் வருகிறது '' அல்லாஹும்மஃபிர் லில்ஹாஜ் வ லிமன் இஸ்தஃபர லில் ஹாஜ்''  யா அல்லாஹ் ஹஜ்ஜி செய்தவரை மன்னிப்பாயாக இன்னும் அவர் யாருக்கு மன்னிப்பு தேடுகிறாரோ அவரையும் நீ மன்னிப்பாயாக.


No articles in this category...