பயணியே சற்று நில்
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் என் இரு தோள்புஜங்களை பிடித்தவர்களாக கூறினார்கள் � நீங்கள் இந்த உலகில் ஒரு ஏழையைப்போன்றோ அல்லது ஒரு பிரயாணியைப்போன்றோ இருங்கள் என்று கூறினார்கள் என்று நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
இந்த ஹதீஸ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டது போன்று தோன்றினாலும், இது அனைவரும் சொல்லப்பட்ட ஒன்று.
இன்னும் ஒரு அற்புதமான ஒரு செய்தி இந்த ஹதீஸிலிருந்து நமக்கு கிடைக்கிறது.
இப்னு உமர் அவர்கள் இந்த ஹதீஸை நபியவர்கள் தனக்கு எவ்வாறு கூறினார்கள் என்ற நிலையையும் ( இரு தோள்புஜங்களை பிடித்தவர்களாக )சேர்த்து வர்ணித்தே கூறியுள்ளார்கள்.
ஹதீஸ்கலை வல்லுனர்கள் இந்த சமுதாயத்திற்கு செய்த மிகப்பெரிய சேவை, ஹதீஸ்களை மட்டும் இந்த சமுதாயத்திற்கு கொடுக்காமல் அது நடைபெற்ற சூழல், அதை அறிவித்தவர்களின் வரலாறு என்று மிகப்பெரும் பொக்கிஷங்களை விட்டுச்சென்றுள்ளனர்.
அல்லாஹ் அவர்கள் அத்துணை பேரின் சிறிய, பெரிய பாவங்களை மன்னித்து, அவர்களின் தரஜாக்களை உயர்த்தி, அவர்களின் மண்ணறையை சுவனத்தின் உயர்ந்த பகுதியாக ஆக்கித்தருவானாக.
இந்த ஹதீஸில் நபிகளார் இந்த செய்தியை கூறும் போது நடந்துகொண்ட விதம் அவர்களின் ;eadership quality யைக் காட்டுகிறது. இப்படி நபிகளார் எந்தந்த மனோநிலையில் இருந்தார்களோ அவற்றையும் முழுவதுமாக ஹதீஸில் பதிவுசெய்கின்றனர்.
தான் செல்லவந்த செய்தியின் முக்கியத்துவதை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உணர்த்துவதற்காக நபியவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள்.
இந்த உலகைப்பற்றி உண்டான செய்தி இது ஒரு நிலையான பொருள் இல்லை, இன்னும் இதன் வெளிரங்கம் ஆடம்பரமாகவும், அழகானதாகவும் இருப்பினும் இதன் உள்ரங்கமோ அழிந்து போகக்கூடியது. அது மனிதர்களை தன் வெளிரங்க அழகால் கட்டிப்போட்டுள்ளது. அதனால் இதன் அழகில் மயங்கிய மனிதன் மறுமைச் சிந்தனைவிட்டும் வெகு தூரம் சென்று விடுகிறான்.
இது குறித்து குர் ஆன் கூறும் வார்த்தை எவ்வளவு நிதர்சனமானது, நிச்சயமானது � இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை (3:185)
இதில் இன்பம் இல்லை என்று சொல்லவில்லை, மறுமையை நிலைநிறுத்தும் போது இது அற்ப இன்பம். ஆனால் அந்த இன்பம் கழிந்து அவன் உணர்வு பெறுவதற்கு முன்பே அவனை மரணம் அள்ளிச்செல்கிறது.
எல்லா விஷயத்திற்கும் வழிகாட்டியாக வந்த நபிகளார் மனித வாழ்வோடு இரண்டுர கலந்த இந்த உலக வாழ்வை குறித்து சொல்லாமல் சென்றிருப்பர்களா?
அவர்கள் தான் நமக்கு நிதமான வழிகாட்டியாயிற்றே, சரியான உபதேசிப்பாளர் ஆயிற்றே. ஆகையால் தான் தேவையான நேரத்தில், தேவையான அளவில், உதாரணங்களோடு தங்கள் தோழர்களுக்கு சொல்லுவது போன்று உலகம் அழியும் நாள் வரை வரும் அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்தார்கள்.
ஒரு ஏழையைப்போன்று அல்லது ஒரு வழிப்போக்கன் போன்று என்ற அழகிய உவமானத்தோடு கூறினார்கள் இந்த இருவருக்கும் எங்கும் நிலையான இடம் இருக்காது, அவன் எண்ணம் முழுவதும் தன் சென்றடய் வேண்டிய இடம் நோக்கி இருக்கும். தன்னிடம் இருக்கும் நிலைகொண்டு பொருந்திக்கொள்வான்.
இன்று நாம் பார்க்கிறோம், எத்தணையோ பணக்கார்கள் கூட பயணம் என்று வந்துவிட்டால் பயணத்திற்க்கு தோதுவான தன் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
என்ன ஒரு அற்புதமான ஒப்பீட்டை கூறியுள்ளார்கள் மனிதரகளாகி நாம் அனைவரும் விரும்பியோ, விரும்பாமலோ மறுமை என்ற ஊர் நோக்கியல்லவா பயணத்தில் இருக்கிறோம்.
பயணம், அது தானே மனிதர்களின் வாழ்கையை புரட்டிப்போடுகிறது. எத்தணையோ நபர்களின் பயணம் அவர்களை கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு கொண்டு செல்கிறது.
இன்னும் சிலரோ மேல் நிலையிருந்து கீழ் நிலைக்கு வருபவரும் உண்டு பயணங்களில் தானே மனிதன் பொறாமை, கோள், பொய், அடுத்தவர்களுக்கு காட்டுதல் போன்ற கீழ் குணங்களிருந்து விலகிநிற்கிறான். இன்னும், ஒருவனைப் பற்றி சாட்சி சொல்லுவதற்க்கு கூட அவரோடு பயணத்தில் இருந்ததயோ அளவுகோல் ஆக்குகிறது இஸ்லாம்.
இப்படி தொடர்கிற செய்திகள் எத்தணையோ.......
ஆகையால் இந்த ஹதீஸை வைத்து மக்களை விட்டு தனித்து சென்று விடலாமா? என்றால் இஸ்லாம் அதையும் அனுமதி அளிக்கவில்லை.
நபிகளாரின் வார்த்தைகளை தீர்மிதி என்ற ஹதீஸ் புத்தகத்தின் ஆசிரியர் பதிவு செய்திருப்பதை கவனியுங்கள்.
மக்களோடு கலந்து அவர்களின் சிரமங்களை பொறுத்துக்கொள்கிற முஸ்லிம், மக்களைவிட்டு தனித்திருந்து அவர்களின் சிரமங்களை பொறுக்காதவரை விட சிறந்தவர் ஆவார்.
இந்த ஹதீஸைக்கொண்டு பொதுவாக நமக்கு இவ்வுலகம் வேண்டாம், இவ்வுலக வாழ்கை ஏமாற்றுதல், ஆகையால் அனைத்தையும் விட்டு ஒதுங்கிவிடவேண்டும் என்ற கருத்து இல்லை.
இந்த ஹதீஸ் வெளிரங்கத்தை குறித்து பேசவில்லை மாறாக மனோநிலைக்குறித்து பேசுகிறது.
சஹாபக்களின் மிகப்பெரும் செல்வந்தர்கள் இருந்தார்கள். செல்வம் அவர்கள் கையில் இருந்ததே தவிர மனதில் இருக்கவில்லை.
இது தான் இங்குள்ள core point. கோடிகளின் வரவும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கவில்லை. கோடிகளின் நஷ்டமும் அவர்களிடம் எவ்வித கலக்கத்தையும் அளிக்கவில்லை.
ஏனெனில், அவர்களின் நபிகளின் சகவாசத்தால் அறிந்திருந்தார்கள், கோடிகளை கொண்டு (பிறக்கும் போது) வந்தவர்களுமில்லை. கோடிகோடியாய் இருதததும் (இறந்தபின்) கொண்டுபோனவர்களும்.
ஆகையால் இல்லாத சொத்துக்கு செந்தம் கொண்டாட என்ன இருக்கிறது.
பிர்அவ்னின் வல்லரசு செத்துக்களேல்லாம் இன்று ஏதோ ஒரு குடிமகன் கையில். செந்தம் கொண்டாட கூட ஆட்களில்லை.
நாம் என்னதான் கோடீஸ்வரர்களாக இருப்பினும் இவ்வுலகைவிட்டு செல்லும் போது விரலில் இருக்கிற இரும்பு மோதிரத்தைக்கூட கழட்ட மறக்காது இந்த உலகு.
இப்படி உள்ள உலகில் வாழ நபிகளாரின் வாக்கு அற்புதம் வழிகாட்டியன்றோ. அதன் அடிப்படையில் வாழ்தால், வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் வெல்பவர்கள் நாமாக இருப்போம்.....
- பேரா. ஹஸனீ
1 | ஒற்றைச்செறுப்பு ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள். | |
2 | திரைகள் விலகட்டும் “முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது" | |
3 | உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும் உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்) | |
4 | நன்மை தீமையும் அதன் அளவுகோலும் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள். | |
5 | வலிபோக்கும் ஆன்மீக வழிகள் நபித்தோழர்கள் தங்களின் குடும்ப செய்திகள், பொருளாதாரம், மார்க்கம் போன்றவற்றில் சந்தேகம் ஏற்படும் போது எப்படி நபி பெருமான் அவர்கள் பக்கம் திரும்பினார்களோ அது போன்று உடல் ரீதியான நோய்களும், அசவுரியங்களும் ஏற்படும் போதும் நபியிடம் வந்து அதற்கான தீர்வை வேண்டி நின்றார்கள் அதன் மூலம் இந்த சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தான் நபி மருத்துவம். | |
6 | முஜாஹிர்களும் மன்னிப்பும் | |
7 | நன்மை தீமையும் அதன் அளவுகோலும் | |
8 | தங்க ஓடை: மனிதனின் பேராசை | |
9 | அக்கம் பக்கம் / அண்டை வீட்டார் | |
10 | என் கண்ணாடி எங்கே? | |
11 | நன்மைக்கு வழிகாட்டினால் | |
12 | பொறாமைக்குரியோர் .... | |
13 | நபியின் மீது பிரியம் | |
14 | அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர் | |
15 | ஈமானின் கிளைகள் | |
16 | வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம் | |
17 | ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை | |
18 | நற்செயல் எது? | |
19 | பட்டாடை | |
20 | நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்... | |
21 | பரிபூரணமான முஸ்லிம் | |
22 | பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான் | |
23 | சுவர்க்கத்தின் சாவி | |
24 | மக்களில் சிறந்தவர் | |
25 | மறுமை | |
26 | மறைவானவற்றை நம்புவது | |
27 | அழகிய துஆ |
