வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?

 - பிறைமேடை தலையங்கம் (ஜுலை 1-15) - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

 

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!

எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, நாட்களையும் நேரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து சிறிதளவும் மாறிவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் சில நேரங்களில் பாதிப்புக்கும் உள்ளாகிறது. என்னதான் நம்மை நம் வழியிலேயே வைத்துக் கொண்டு, சமூகத்திற்கு முற்றிலும் பயனுள்ள வகையில் பணிகள், எழுத்துக்கள், பேச்சுக்கள் என்று அனைத்தையும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் நம்மை நோக்கி வருகிற சிற்சில இடையூறுகளைச் சந்திக்காமல் இருக்கவும் முடிவதில்லை. இதனால் நம்முடைய சிந்தனை ஓட்டம் பாதிப்படைவதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் உலகில் வாழ்கிற குறுகிய இக்காலக்கட்டத்தில் செலவு செய்கிற செல்வத்திற்கு மாத்திரமல்ல; செலவு செய்கிற நேரம், உழைப்பு, உதவிகள் என்று எல்லாவற்றிற்கும் வல்ல இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே என்கிற கவலை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருந்தே ஆக வேண்டுமல்லவா!

அதனால்தான் ஒழுக்கம், கல்வி என்பதோடு இறையச்சம், தொழுகை, நற்பண்புகள், நற்செயல்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல முஸ்லிமாக வாழவேண்டும் என்பதை நாம் கடமையாக எண்ணுகிறோம். இதே சிந்தனையில்தான் சமூகப் பணி, அரசியல் என்று வருகிறபோது கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழிநின்று தாய்ச்சபை முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதை அந்தக் கடமையின் அங்கமாகக் கருதி பணியாற்றுகிறோம்.

நடைமுறை அரசியல்பாணி என்பது சில நேரங்களில் நமக்கு கசப்புணர்வாகத் தென்படுவதையும் இல்லை எனச் சொல்ல முடியாது. அப்படி என்ன கசப்பு? நமது சமுதாயத்தில் நாங்களும் பணியாற்றுகிறோம் எனச் சொல்லி புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டு தனித்தனி அமைப்புகளாகச் செயல்படுபவர்களே நம்மைச் சீண்டுவதும், கீழான விமர்சனங்கள் செய்வதும், தவறான தகவல்களைத் தந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுமான காரியங்களில் ஈடுபடுவதைத்தான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விழைகிறேன். நம்மைச் சீண்டுவதையோ, கீழான விமர்சனங்கள் செய்வதையோ நாம் பொருட் படுத்துவதுமில்லை; அதற்காக பதில் சொல்ல வேண்டுமே என்று நேரம் ஒதுக்கி தரம் தாழ்ந்து விடுவதுமில்லை. ஆனால், சமுதாயத்திற்குத் தவறான தகவல்கள் தந்து குழப்பங்களை உருவாக்குகிறபோது நாம் அமைதியாக இருந்துவிடவும் கூடாது. காரணம், மக்களுக்குத் தெளிவான பாதையைக் காட்டித் தந்து, அரசியல் தளத்தில் சமுதாயத்தின் கண்ணியத்தை நிலைநாட்டுவது நமது கடமை என நினைக்கிறோம். அந்தப் பார்வையில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டு நம்முடைய இதழில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என எண்ணுகிறோம்.

சென்ற 22.06.2012 அன்று விண் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் இடஒதுக்கீடு சம்பந்தமான சில கருத்துக்கள் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் அண்ணன் கமுதி பஷீர் அவர்களும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் மரியாதைக்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் இன்னும் சிலரும் இடம் பெற்றதாக அறிந்தேன். விவாத ஓட்டத்தில் ��நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான பத்து சதவிகித இடஒதுக்கீடு பற்றி இன்றுவரை நாடாளுமன்றத்தில் அப்துல் ரஹ்மான் எம்.பி. ஒரு வார்த்தையாவது வாய் திறந்ததுண்டா!�� என பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கேட்டுவிட்டு, நான் ஏதோ நாடாளுமன்றத்தில் வாயே திறக்காமல் மவுனியாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை சமுதாயத்திற்குத் தெரிவித்திட முயற்சித்திருக்கிறார் என்று அறிந்தேன். மனதிற்கு சற்று கஷ்டமாக இருந்தது. ஆற்றப்பட வேண்டிய பணிகளும், சொல்லப்பட வேண்டிய கருத்துக்களும் ஏராளம் இருக்க, ஏன் இதுபோன்று தவறான தகவல்களை மீடியாக்களில் பரப்பி சுகம் காண விரும்புகிறார்கள் எனத் தெரியவில்லை. இதுபோன்ற பழிச்சொற்கள் இதற்கு முன்னரும் பலமுறை தாய்ச்சபை முஸ்லிம் லீகைப் பற்றிய கீழான விமர்சனங்களாக வெளிவந்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் பதில்கள் சொல்லிக் கொண்டு நாமும் அதே தரத்திற்கு இறங்கிப் போக வேண்டியதில்லை என்றாலும் சில முக்கியமான விளக்கங்களை ஆரோக்கியமான கோணங்களில் தருவது நமது கடமையாகிறது. இப்போது எனது பெயரைக் குறிப்பிட்டே என்னை சிறுமைப்படுத்த முயன்றிருக்கிற பேராசிரியருக்கு பதிலுரைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நாடாளுமன்றத்தில் பல விவாதங்களில் பங்கு கொண்டு, பல தலைப்புகளிலே பேசியிருக்கிறேன்; இதுவரை 313 கேள்விகள் கேட்டிருக்கிறேன்; 55 தடவை குறுக்கிட்டிருக்கிறேன்; நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் அதிகமான நாட்கள் பங்கு கொண்டு ஜனநாயகக் கடமையினை ஆற்றியிருக்கிறேன். இவைகளையெல்லாம் நாடாளுமன்ற கணினி பதிவேட்டிலிருந்து இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்தி மிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

சென்ற ஏப்ரல் மாத கூட்டத் தொடர் முடிவடைந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கு கொண்டு பேசியபோது இப்படிக் கேட்டேன். ��இடஒதுக்கீடு என்று 4 சதவிகிதம் வழங்குவதாக இப்போது அரசு அறிவித்திருக்கிறது. அதுவும் முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த, சீக்கிய மற்றும் பார்சிய சமூகங்களை உள்ளடக்கி அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கென்று அறிவித்திருக்கிறீர்கள். இது மிகப்பெரிய சமுத்திரத்தில் விழுந்த ஒரு மழை நீர்ச் சொட்டு போன்றது. இதனால் எந்த பயனும் விளையப் போவதில்லை. சிறுபான்மை முஸ்லிம்களின் உண்மையான நிலையை நன்கு ஆய்வு செய்ய நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை நியமித்தது. அந்தக் கமிஷனும் முறையாக ஆய்வு செய்து முழுமையான அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதில் முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் மிக, மிகக் கீழான நிலையில் இருக்கிறார்கள் என்றும் அதற்குரிய சரியான தீர்வாக 10 சதவிகித இடஒதுக்கீட்டை பிரத்தியேகமாக முஸ்லிம் சமுதாயத்தினருக்கு வழங்க வேண்டுமென்று பரிந்துரையும் செய்தது. அதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் நியாயத்தை நிலைநாட்ட இயலும் என்றும் குறிப்பிட்டது. ஆனால், அதனைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு இன்னமும் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது; மிஸ்ரா கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் உருண்டோடியும் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது; ஒருபுறம் கமிஷன்கள் அமைக்கிறீர்கள்; மறுபுறம் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறீர்கள். வேறு எதற்காகத்தான் சச்சார் கமிட்டி, மிஸ்ரா கமிஷன் என்றெல்லாம் அமைத்து அரசின் கோடிக்கணக்கான பணத்தையும், நீதியரசர்களின் நேரத்தையும், ஆய்வாளர்களின் உழைப்பையும் வீணடிக்கிறீர்கள்? மாறாக இதுபோன்ற கமிஷன்களை அமைக்காமலே இருந்து விட்டுப் போகலாமே! மிஸ்ரா கமிஷன் அமைக்கப்பட்டது உண்மையிலேயே அர்த்தப்பூர்வமானதாக இருக்குமேயானால் அறிக்கையின் பரிந்துரைகளை உடனே நிறைவேற்றுங்கள்; அதில் சொல்லப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீட்டை சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்குங்கள்�� என்று அழுத்தம் திருத்தமாக வாதிட்டுப் பேசியது பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதையெல்லாம் மறைத்துவிட்டு வேண்டுமென்றே என் பெயரை இழுத்து வீண்பழி சுமத்தியிருப்பதை நடுநிலையாளர், சமூக சிந்தனையாளர் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

எனவே அடுத்த இரண்டு நாட்களில் 24.06.2012 அன்று லால்பேட்டையில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் இதைப் பற்றி சற்று விரிவாகவே விளக்கி ஒரு கேள்வியையும் சவாலாக வைத்திருக்கிறேன்.

நான் மிஸ்ரா கமிஷன் பற்றி வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய, குறுக்கிட்டுப் பேசிய, விவாதத்தில் பங்கு கொண்ட நிகழ்வுகளை எல்லாம் மக்களுக்கு மத்தியில், இதே லால்பேட்டை நகரில் நிரூபணம் செய்யத் தயாராக இருக்கிறேன். நிரூபிக்க முடியவில்லை என்றால் ��நாடாளுமன்றத்திற்குச் சென்று மூன்று ஆண்டுகள் ஆனபின்பும் மிஸ்ரா கமிஷன் அறிக்கை பற்றி எதுவுமே பேசாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்�� என பொதுமக்களிடம் என் இயலாமையை வெளிப்படுத்தத் தயார். மிஸ்ரா கமிஷன் அறிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் நான் பேசியிருக்கிறேன் என்று நிரூபித்துவிட்டால் பொதுமக்களிடத்தில் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டாம்; குறைந்தபட்சம் தொலைக்காட்சி மூலமாக சமூகத்திற்குத் தவறான தகவல்கள் தரப்பட்டதை வாபஸ் வாங்கிக் கொண்டு ��அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்�� என்றாவது பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா? என்கிற கேள்வியை வைத்திருக்கிறேன்.

மறுநாள் 25.06.2012 திங்களன்று திண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்திலும் சமுதாய மக்களின் இது சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதத்தில் அங்கேயும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு இதே கேள்வியை விடுக்க வேண்டியதாகிவிட்டது.

பிறைநெஞ்சே! நம்முடைய போக்கில் நமது பயணத்தைத் தொடர்கிறோம். நாம் யாருக்கும் எதிரியல்ல. எல்லோரையும் அரவணைத்து அன்போடும், பண்பாட்டு உணர்வோடும் பணியாற்றவே விரும்புகிறோம். நம்மை வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? என்று மட்டும்தான் தெரியவில்லை. காலம் பதில் சொல்லும். வல்ல அல்லாஹ் போதுமானவன்.

 

அன்புடன், எம். அப்துல் ரஹ்மான் ஆசிரியர்.

 






1 உணரப் படாத தீமை சினிமா

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.

2 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது.

3 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!

செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.

4 விரக்தி விஷத்தை விட கொடியது

பத்துக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தான் யூசுப் (அலை) மீது பழி சுமத்தப்பட்டது. ஆனால் கந்தல் ஆடை அவருடைய கற்பை காப்பாற்றும் ஆதாரமாக வந்தது.

5 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!

எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள்.  பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!

6 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
7 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
8 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
9 அந்தப் பெண்களாக நாம்...
10 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
11 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
12 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
13 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
14 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
15 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
16 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
17 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
18 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
19 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
20 இளையான்குடியில் உருது மக்கள்
21 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
22 மரணம் நோக்கி...
23 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
24 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
25 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
26 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
27 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
28 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
29 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
30 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
31 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
32 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
33 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
34 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
35 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
36 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
37 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
38 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
39 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
40 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
41 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
42 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
43 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
44 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
45 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
46 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
47 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
48 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
49 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
50 எது வணக்கம்..?
51 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
52 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
53 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
54 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
55 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
56 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
57 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
58 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
60 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
61 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
62 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
63 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
64 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
65 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
66 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
67 மனைவியை_நேசிங்கள்..
68 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
69 அம்மா! அம்மா!
70 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
71 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
72 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
73 இமாம்களும் மத்கபுகளும்.
74 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
75 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
76 பராஅத் இரவின் சிறப்புகள்
77 வாப்பா!
78 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
79 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
80 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
81 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
82 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
83 இதிலென்ன வெட்கம்?
84 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
85 பழையன கழிதலும் புதியன புகுதலும்
86 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
87 கற்பில் கவனம் தேவை
88 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
89 இஸ்திஃகாராவின் சிறப்பு
90 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
91 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
92 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
93 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
94 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
95 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
96 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
97 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
98 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
99 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
100 இறுக்கமும் இரக்கமும்
101 இஷா தொழுகையும் இரவு உணவும்
102 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
103 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
104 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
105 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
106 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
107 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
108 பெயர்களை நினைவில் வைப்போம்
109 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
110 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
111 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
112 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
113 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
114 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
115 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
116 ஒரு 2.5 கதை
117 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
118 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
119 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
120 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
121 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
122 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
123 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
124 குறைகளை மறைத்தல்
125 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
126 நல்ல பெண்மணி
127 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
128 💥 யார் அந்த மாமனிதர்..?
129 ஈர்ப்பை விதைப்போம்!
130 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
131 யார் இந்த துலுக்கன்?
132 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
133 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
134 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
135 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
136 நிம்மதி - சிறுகதை
137 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
138    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
139 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
140 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
141  வாழ்க்கை வாழ்வதற்கே !
142 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
143 விற்கப்படும் மார்க்கம்
144 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
145 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
146 பார்வைகள் பலவிதம் !
147 நேர மேலாண்மை / திட்டமிடல்
148 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
149 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
150 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
151 தந்தைகளே! கவனியுங்கள்
152 வரலாறு புகட்டும் பாடம்
153 அல்குர்ஆன் என்னும் மதுரம்
154 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
155 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
156 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
157 நாம் தான் முயல வேண்டும்.
158 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
159 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
160 கற்பா? கல்லூரியா?
161 கசாப்புத் தொழில் சிறந்தது....
162 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
163 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
164 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
165 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
166 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
167 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
168 என் ஹிஜாப் என் உரிமை!!!
169 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
170 முகமாகும் பெண்கள்!!
171 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
172 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
173 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
174 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
175 செல்போன்கள்... ஜாக்கிரதை!
176 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
177 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
178 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
179 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
180 ஈமானே-உன் விலையென்ன?
181 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
182 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
183 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
184 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
185 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
186 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
187 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
188 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
189 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
190 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
191 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
192 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
193 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
194 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
195 அறிவைத் தேடுவோம்!
196 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
197 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
198 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
199 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
200 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
201 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
202 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
203 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
204 “வேர்கள்” வரலாறு!
205 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
206 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
207 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
208 மனிதனின் தேவை ! – மன அமைதி
209 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
210 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
211 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
212 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
213 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
214 பேச்சு,மெளனம்
215 ஜனாஸா - மைய்யத்
216 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
217 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
218 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
219 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
220 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
221 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
222 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
223 வலிமார்கள் என்பவர்கள் யார்?
224 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
225 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
226 மனித குல விரோதி
227 எனது பெயர் ஜனாஸா!
228 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
229 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
230 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
231 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
232 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
233 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
234 தமிழரும் இசுலாமியரும்
235 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
236 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
237 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
238 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
239 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
240 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
241 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
242 கற்பனைகளும் இஸ்லாமும்
243 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
244 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
245 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
246 மது ஒரு பெரும் பாவம்
247 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
248 பெற்றோர்களைப் பேணுவோம்!
249 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
250 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
251 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
252 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
253 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
254 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
255 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
256 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
257 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
258 மறுமை வாழ்வை நேசிப்போம்!
259 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
260 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
261 சுதேசி சிந்தனைகள்.......
262 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
263 கல்வி நல்லோர்களின் சொத்து!
264 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
265 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
266 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
267 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
268 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
269 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
270 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
271 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
272 அறிவைத் தேடுவோம்!
273 ஆக்காதீர் ஆசனங்களாக
274 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
275 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
277 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
280 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
281 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
282 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
283 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
284 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
285 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
286 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
287 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
288 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
289 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
290 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
291 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
292 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
293 விசுவரூபம் ஒரு விளக்கம்
294 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
295 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
296 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
297 கண்ணாடிகள் கவனம்
298 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
299 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
300 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
301 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
302 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
303 கருத்து வேறுபாடுகள்.
304 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
305 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
306 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
307 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
308 ஓ! என் இளைய சமுதாயமே!
309 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
310 வீண் செலவு வேண்டாமே