ஒற்றைச்செறுப்பு

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்

“ உங்களில் ஒருவரின் செருப்பின் வார் அறுந்துவிட்டால் அதை சரி செய்யும் வரை மற்றொரு செருப்பில் மட்டும் நடக்கவேண்டாம்” (முஸ்லிம்)

ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள்.

கிட்டதட்ட 1400 ஆண்டுகளுக்கு முன் செருப்பு அணிந்து நடப்பவர்களை தேடிப்பிடிக்கவேண்டிய காலத்தில், செருப்பு அணிந்து நடப்பது குறித்தும், ஒரு செருப்பு அணிந்து நடக்கவேண்டாம் என்று பேசுவது எவ்வளவு பெரிய முன்னேற்றம். எவ்வளவு பெரிய கலாச்சார வார்த்தை.

பெருமானாரின் போதனைகள் எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக அமைந்திருக்கும். இன்னும், உலகில் எப்பொருளானாலும் அநீதம் கூடாது என்று போதித்தவர்கள் நபியவர்கள். செறுப்பு போடுகிற விஷயத்திலும் இதுவே அளவுகோள் முன்னிறுத்தப்படுகிறது.

இதன் தொடராக இன்னொரு ஹதீஸிலே நபியவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவன் ஒரு செறுப்பு அணிந்து நடக்கவேண்டாம், அணிந்தால் முழுமையாக (இரண்டையும்) அணியட்டும் அல்லது முழுமையாக (இரண்டையும்) கழைந்துவிடட்டும்.

இன்னும் ஒரு ஹதீஸில் நின்று கொண்டு செறுப்பு அணிய வேண்டாம் அமர்ந்து கொண்டு அணியட்டும் என்றும் அறிவுறித்தியுள்ளார்கள். ஏனெனில் அந்த காலங்களில் அணிந்த செறுப்புகள் நம் இன்றும் அணியும் ஷு போன்ற நிலையில் உள்ளது. ஆகையால், அதை அணியும் போது நின்று கொண்டு அணிந்தால் அணிபவருக்கு சிரமம் ஏற்படும் என்ற அடிப்படையில் அறிவுறித்தினார்கள். இந்த தடை நாம் இன்று பயன்படுத்தும் செறுப்புக்கு அல்ல என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

செறுப்பு அணியும் ஒழுக்கத்தை கூட நமக்கு சொல்லிக்கொடுத்த எப்பொருமான எத்துணை அற்புதமானவர்கள். நம்மீது எத்துணை அக்கறையோடு வழிகாட்டியுள்ளார்கள். ஆகையால், இறைவன் குறிப்படுவது போன்று நபியவர்கள் நம் உயிரை விட நமக்கு மேலானவர்கள்.

அவர்கள் மீது எவரும் கலங்கம் கற்பிக்க நினைத்தால் நம் உயிரைக்கொண்டு அந்த கலங்கத்தை ஒரு முஸ்லிம் துடைத்தெடுக்க தயங்கமாட்டான்.


1 திரைகள் விலகட்டும்

“முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது"

2 உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்)

3 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4 வலிபோக்கும் ஆன்மீக வழிகள்

நபித்தோழர்கள் தங்களின் குடும்ப செய்திகள், பொருளாதாரம், மார்க்கம் போன்றவற்றில் சந்தேகம் ஏற்படும் போது எப்படி நபி பெருமான் அவர்கள் பக்கம் திரும்பினார்களோ அது போன்று உடல் ரீதியான நோய்களும், அசவுரியங்களும் ஏற்படும் போதும் நபியிடம் வந்து அதற்கான தீர்வை வேண்டி நின்றார்கள் அதன் மூலம் இந்த சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தான் நபி மருத்துவம்.

5 முஜாஹிர்களும் மன்னிப்பும்

என் சமூகத்தில் அத்துணை பேருக்கும் மன்னிப்பு உண்டு ஆனால் முஜாஹிர்களைத்தவிர

6 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
7 தங்க ஓடை: மனிதனின் பேராசை
8 பயணியே சற்று நில்
9 அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்
10 என் கண்ணாடி எங்கே?
11 நன்மைக்கு வழிகாட்டினால்
12 பொறாமைக்குரியோர் ....
13 நபியின் மீது பிரியம்
14 அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்
15 ஈமானின் கிளைகள்
16 வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்
17 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை
18 நற்செயல் எது?
19 பட்டாடை
20 நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...
21 பரிபூரணமான முஸ்லிம்
22 பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
23 சுவர்க்கத்தின் சாவி
24 மக்களில் சிறந்தவர்
25 மறுமை
26 மறைவானவற்றை நம்புவது
27 அழகிய துஆ