Tamil Islamic Media

அமெரிக்க முன்னால் மாடல் அழகி ஸாரா பூக்கர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.

அமெரிக்க முன்னால் மாடல் அழகி ஸாரா பூக்கர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.   பிரபல மாடல் அழகியாக இருந்த “ஸாரா பூக்கர்” அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற வரலாற்றை தனது வாக்கு மூலமாக இங்கு முன் வைக்கிறார்.  அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப் பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.

 ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக் கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.

 நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?

 செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ”கூடாரத்துக்குள்” அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.

 அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

 இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.

 கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான ‘கவுன்’ ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.

 உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

 அதுமட்டுமி






1 கேப்டன் ஜேக் குருவி (Captain Jack Sparrow)

துருக்கியர்கள் கொள்ளைக்காரர்கள், அற்பத் தொகைக்கு கொலையும் புரிவார்கள் என்று வில்லியம் நினைத்திருக்க, அவர்களோ பள்ளிவாசல்களில் குழுமி தொழுதுகொள்கிறார்கள். அந்த இடங்களோ தாம் ஆழ்ந்து சிந்தனையில் அமர்ந்து தம்மைத் தொலைக்கும் இடங்களாக உள்ளன - என்று எழுதியிருக்கிறார் வில்லியம்.

2 இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) - கத்தோலிக்க பாதிரியாராக

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.

3 இஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம்

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

4 ராபர்ட் டெவிலாவும், சகோதரர். உஸ்தாத் நௌமன் அலி கானும்...

5 மீனாட்சி புர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?

மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.

6 MTV முதல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்