Tamil Islamic Media

வெயிலும் தங்கும் விந்தை நிழல் !

கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்

 


கல்பின் கனியே
கண்ணின் மணியே
யா ரசூலல்லாஹ்
யா ரசூலல்லாஹ் !

*

உம்மைப் புகழ
எம்மைத் தடுப்பார் யார் ?
யா ரசூலல்லாஹ்
யா ரசூலல்லாஹ் !

*

விழியாய்த் தாங்கள்
வாராதிருந்தால் யா ரசூலல்லாஹ்
ஒளியாம் இறையை
உணர்ந்திருப்போமோ யா ரசூலல்லாஹ் !

*

கை விரலாட்டிக்
கண்ணைக் குத்துவோர் யா ரசூலல்லாஹ்
நன்றி பாராட்டும்
நடைமுறை தடுப்பதோ யா ரசூலல்லாஹ் !

தன் சுமை குறைத்ததற்காகத்
தணல் நரகும் புகழுமே யா ரசூலல்லாஹ் !

*

சகலமும் படைத்தோனே
சலவாத் சொல்கையில் யா ரசூலல்லாஹ்
சர்வதேச உண்டியல்கள்
சலசலப்பதேனோ யா ரசூலல்லாஹ் !

*

சக்கராத் ஹாலிலும் எம்
சமூகத்துக்காக யா ரசூலல்லாஹ்
தௌபா செய்த
தனிப்பேரருளே யா ரசூலல்லாஹ்

*

கொளமையே இங்குக்
காட்டிக் கொடுப்போர் யா ரசூலல்லாஹ்
கண்ணிய மொவ்லிதுக்குக்
கதவை அடைப்பதோ யா ரசூலல்லாஹ் !

*

கண்ணாடியென முன்னோர்கள் வரக்
கண்ணாகவே வந்தும் யா ரசூலல்லாஹ்
முன்னை இறை நேசர்தம்மை
கண்ணியம் செய்தீர் யா ரசூலல்லாஹ் !

*

சமரச சன்மார்க்க
தர்காக்கள் நோக்கி யா ரசூலல்லாஹ்
எச்சில் துப்பினால்
எழுஞாயிறு அணையிமோ யா ரசூலல்லாஹ் !

*

பிறந்த பெண்சிசு மண்ணில் புதைத்துச்
சொர்கத்துக்கு ஏற்றுமதி செய்த
பூமியில் யா ரசூலல்லாஹ்
சொர்க்கத்தைத் தாயின்
காலடிக்குக் கீழே இறக்குமதி செய்த
புரட்சியாளரே யா ரசூலல்லாஹ் !

*

மார்க்கத் தாயின் மார்பில்
வாள் பாய்ச்சிவிட்டு யா ரசூலல்லாஹ்
புட்டிப்பால் பிள்ளைக்குப் புகட்டுவோர்
உம் புகழ்பாடத் தடுக்கின்றார் யா ரசூலல்லாஹ் !

*

இருலோகத் தூதர் உம்
இறுதிமூச்சு அடங்கும் வேளை யா ரசூலல்லாஹ்
அணையும் விளக்கேற்ற
தங்கள் வீட்டில்
எண்ணெய் இல்லை யா ரசூலல்லாஹ் !

*

என்ன இல்லை
இவர்கள் வீட்டில் யா ரசூலல்லாஹ்
எடுத்துப் புகழ்வதைத்
தடுத்திடலாமோ யா ரசூலல்லாஹ் !

*

காற்றுக்கு வலிக்குமெனக்
கைவீசி நடந்ததில்லை யா ரசூலல்லாஹ்
கசக்கிய கரத்திற்கும் நறுமணமூட்டிய
கருணை மலரே யா ரசூலல்லாஹ் !

*

கட்டைப் பஞ்சாயத்துக்
கடத்தல்கார அடிதடியார் யா ரசூலல்லாஹ்
கபர்ஸ்தானிலும்
பிரிவினைச் செய்தோர்
கழுத்து நெரிப்பினும்
தகைத்திட முடியுமோ யா ரசூலல்லாஹ் !

*

வெயிலும் தங்கும்
விந்தை நிழலே யா ரசூலல்லாஹ்
அடிமையின் விடுதலை
ஆரம்பம் செய்தீர் யா ரசூலல்லாஹ் !

*

இளையோரைத் தூண்டி
சிறையோராய் ஆக்கியோர்
யா ரசூலல்லாஹ்
வேதத்தினால் பேதம் ஒழித்த
வேந்தர் புகழ்க் கடல்
சிப்பியடக்குமோ யா ரசூலல்லாஹ் !

... நன்றி : நமது முற்றம் & ஆசிரியர் அபூஹாசிமா


1 இருக்கு ஆனால் இல்லை...!

காற்று வெறும் காற்றுதான்! கண்ணுக்குத் தெரிவதில்லை! கைகளுக்கும் கட்டுப்படுவதில்லை!

2 ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !

நடுவண் அரசே! நாசகாரக் கூட்டமே! நானிலமே நகைக்குது நல்லறமெலாம் கரையுது! நாடிது ஆளவா? நாங்களென்ன மாளவா?

3 பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்

ஷரீஅத்தைக் காக்க சதிகாரர்த் தோற்க சகோதர உணர்வில் சங்கமித்து உழைப்போம்

4 வெள்ளைப் பூக்களின் … பயணம் !

ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள்

5 திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது

6 செவி கொடு ; சிறகுகள் கொடு !
7 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
8 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
9 மரணம்.. ஒரு விடியல்..
10 சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
11 வேதம் தந்த மாதம்
12 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
13 சொந்தமாகட்டும் சொர்க்கம் !
14 விரக்திக்கு விடைகொடு!
15 பெருமானே பெருந்தலைவர்
16 பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
17 கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
18 கஅபா - அத்தாவுல்லா
19 போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........