பாடலியில் ஒரு புலி

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

"பாடலியில் ஒரு புலி"
----------------------------------
1857 - சிப்பாய் கலகம் வட இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலகட்டம் முக்கிய நகரங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டு யாரும் வெளிவரக்கூடாது என்ற தடை உத்தரவினை ஆங்கில அரசு விதித்திருந்தது. ஒரு நாள் பாடலிபுரம் நகரில் "பீர்அலி" என்ற இளைஞனின் வீட்டின் முன் தடை உத்தரவை மீறி 200 முஸ்லிம்கள் கூடுகின்றனர்.
கூடிய மக்கள் முன் பீர்அலி எழுச்சிமிக்க உரையாற்றுகிறார். பின்னர் அனைவரும் தேசியக் கொடியைக் கையிலும், விடுதலைக் கோசத்தை நாவிலும் ஏந்தியவர்களாக ஊர்வலமாப் புறப்படுகின்றனர். ஊர்வலத்தினரைக் கைது செய்ய ஆங்கில அதிகாரி லயால் ராணுவத்துடன் வருகிறான். ஊர்வலத்தை வழிமறித்த லயாலை பீர்அலி சுட்டு வீழ்த்துகிறார். நகரெங்கும் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. பீர்அலி கைது செய்யப்படுகிறார்.

ராணுவக் கோர்ட்டில் பீர்அலிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இறுக்கிப் பூட்டப்பட்ட விலங்குகளால் அவர் கைகளிலிருந்து ரத்தம் கசிய இழுத்து வரப்பட்டு தூக்கு மேடையில் நிறுத்தப்படுகிறார். ஒரு பிறவி வீரனுக்குரிய புன்முறுவலுடன் தூக்குமேடையில் நின்ற பீர்அலிக்கு தன் குழந்தையின் ஞாபகம் வர ஒருகண நேரம் அவர்முகத்தில் சோகம் படர்கிறது. இதனைக் கவனித்த அதிகாரிகள், இதுதான் தக்க சமயம் என்று பீர்அலியை, "பீர்அலி! கிளர்ச்சித் திட்டத்தில் இறங்கியுள்ள மற்ற தலைவர்களின் பெயர்களை நீ இப்போது வெளியிட்டால், உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்!" என்றனர். அதற்கு மறுத்த பீர்அலி,

நீங்கள் இப்போது என்னைத் தூக்கிலிடலாம். என் போன்ற பலரையும் தூக்கிலிடலாம். ஆனால் எங்களுடைய லட்சியத்தை நீங்கள் ஒரு காலத்திலும் தூக்கிலிட முடியாது. நான் இறந்தால் எனது ரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் உதித்து உங்கள் சாம்ராஜயத்தையே அழித்து விடுவார்களென்பது நிச்சயம்! என்று தன் தேசத்தின் எதிர்கால விடியல் கனவைத் தன் இறுதி மூச்சில் வெளிப்படுத்தியவாறு தூக்கு கயிறை முத்தமிடுகிறார்.

பீர் அலியின் மரணச் செய்தி கேட்டு தனபுரி ராணுவ முகாமில் இருந்த இந்திய சிப்பாய்கள் ஜுலை 25-ஆம் தேதி மிகப்பெரும் புரட்சியை ஆரம்பித்தனர்.

பீர் அலி லக்னோவில் பிறந்து வளர்ந்தவர். பாடலிபுரத்தில் புத்தக வியாபாரம் செய்து வந்தார். பாடலிபுரத்தில் தேசபக்தர்களைத் திரட்டி ஆயதங்களுடன் அத்தேசிய வீரர்களைத் தயார் செய்து வைத்திருந்தார். "எந்த நேரத்திலும் தேசவிடுதலைக்காக தங்கள் உயிரையும் இழப்போம்" என்று அனைவரும் பீர் அலியிடம் சத்யப்பிரமாணம் செய்திருந்தனர். பீர்அலியின் மரணத்திற்குப் பின் இவ்வீரர்கள் பாடலிபுரம், தனபுரி பகுதிகளில் ஆங்கிலேயர்களைப் பழிவாங்கும் மிகப்பெரும் கிளர்சிசியில் ஈடுபட்டனர்.
- (வீரசாவர்க்கர்,எரிமலை, பக்கம் 272-274)

தகவல்: http://pinnoottavaathi.blogspot.com/2012/08/blog-post.html






1 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!

இதுவல்லவா நபி நேசம்!!!!!!! ஹஸன் அல் இக்திர்லி.யார் இவர்? நமது கர்ஜனைகளில் மட்டும் வெளிப்படும் நபி நேசம் அவர்களது கற்பனைகளில் கூட வெளிப்பட்டது.

2 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....

இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது..........

3 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?

ஹிஜ்ரி 1325 இல் முதன் முதலாக மதீனத்துப் பூங்காக்குள் மின் விளக்குகள் வருகைத் தந்தது.வரவழைத்தது வேறு யாருமில்லை, உஸ்மானியா பேரரசின் கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்)அவர்கள் தான்.

4 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்

அதாவது எல்லா கடைகளிலும் கூடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.ஒரு செல்வந்தர் அந்த கடைக்கு வந்து தனக்கு தேவையான நான்கு ரொட்டிகளுக்கு பணம் செலுத்தாமல் எட்டு ரொட்டிக்களுக்கான பணத்தை கொடுக்கிறார்.

5 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1

சுமார் எழுநூறு ஆண்டுகள் இங்கு தான் நான் அயராமல் நிற்கிறேன். இந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட இதுவரை நான் நகர்ந்தது இல்லை. என் இரு கண்களை ஒரு வினாடி கூட நான் மூடியதும் இல்லை. காலத்தின் ஓட்டம், அதிகாரத்தின் மாற்றம் என அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
14 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
15 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
16 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
17 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
18 சூஃபிக்களும் புனித போர்களும்
19 யார் தேச விரோதி?
20 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
21 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
22 விடுதலைப்போரில் வீரமங்கையர்
23 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
24 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
25 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
26 அந்த இரண்டணா ......
27 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
28 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
29 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
30 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
31 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
32 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
33 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
34 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
35 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
36 தமிழகத்தில் முஸ்லீம்கள்
37 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
38 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
39 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
40 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
41 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
42 முதல் சுதந்திரப் பிரகடனம்
43 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
44 காலித் பின் வலீத் (ரலி)
45 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
46 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
47 முதல் வாள்!
48 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
49 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
50 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்
51 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
52 திருநெல்வேலி வரலாறு...!