Tamil Islamic Media

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4

மன்ஸிகர்த் யுத்தம்

ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன.

கி.பி. 1071ஆம் ஆண்டில், ‘இந்த அமைதி நன்றாக இருக்கிறது. மேலும் இப்படியே தொடர்வோமே’ என்று பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV (Romanus Diogenes) சமாதான ஒப்பந்தத்தை நீட்டித்து அல்ப் அர்ஸலானுக்குத் தூது அனுப்பினார். அது சுல்தானுக்கு உடனே பிடித்துவிட்டது. ‘நல்லது. அப்படியே ஆகட்டும்’ என்று அதை அவர் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். காரணம் இருந்தது.

அவரது பட்டியலில் முன்னுரிமை  பெற்றிருந்தது அலெப்போ நகரம். அச் சமயம் அந் நகரத்தை எகிப்திய அரசாங்கம் கைப்பற்றி வைத்திருந்தது. அதை மீட்டு எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தபோதுதான் பைஸாந்தியத் தரப்பிலிருந்து இப்படி ஓர் ஒப்பந்த நீட்டிப்பு. தாமாக வந்த வாய்ப்பைத் தவற விடாமல் ஏற்றுக்கொண்டு, அலெப்போ நோக்கித் தமது படையினருடன் விரைந்தார் அல்ப் அர்ஸலான். ஆனால் அவர் நம்பியதுபோல் பைஸாந்தியத்திற்கு அமைதி தேவைப்படவில்லை. அவகாசம்தான் தேவைப்பட்டது! ஸெல்ஜுக்கியர்களுக்கு எதிராகப் பெரும் படை ஒன்றைத் திரட்டப் போதுமான அவகாசம்!

பைஸாந்தியம் ஸெல்ஜுக்கியர்களிடம் இழந்திருந்த வளமான உயர்நிலப்பரப்புகள் பாரம்பரியமாக அப்பேரரசின் அதிகார மையமாகத் திகழ்ந்தவை. அவற்றை மீட்டுத் தம் கைவசம் கொண்டுவர வேண்டும் என்பது அவர்களுக்குச் சொல்லி மாளாத கவலை. மட்டுமின்றி, கிழக்கு அனட்டோலியா வரை ஆக்கிரமித்துவிட்ட துருக்கியர்களைத் திட்டவட்டமாகத் தடுத்து நிறுத்தி நசுக்க வேண்டாமோ?

ஒப்பந்தம் கையெழுத்தாகி, அல்ப் அர்ஸலான் தெற்கு நோக்கி அலப்போவுக்குச் சென்றதும், அதை எடுத்துக் கண்ணைத் துடைத்துவிட்டு, மளமளவென்று காரியத்தில் இறங்கினார் சக்ரவர்த்தி ரோமானஸ். நாற்பதாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும் படையைத் திரட்டி, மன்ஸிகெர்த் நகரை நோக்கி நகர்ந்தார். அலப்போ சென்றிருக்கும்  அல்ப் அர்ஸலான் சுதாரித்துத் தம் படையுடன் வருவதற்குள் மன்ஸிகெர்த் நகரைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பது ரோமானஸின் திட்டம். ஆனால் அதற்குமுன் அல்ப் அர்ஸலானுக்குச் செய்தி எட்டிவிட்டது. அலப்போவிலிருந்து அப்படியே திரும்பி, முப்பதாயிரம் வீரர்களுடன் அங்கு வந்துச் சேர்ந்துவிட்டார் அவர்.

ஹிஜ்ரீ 463ஆம் ஆண்டு (கி.பி. 1071) நிகழ்ந்தது வரலாற்றுப் புகழ் மிக்க மன்ஸிகர்த் யுத்தம். உலக வரலாற்றில் அது மிக முக்கியமான ஒரு யுத்தமாகக் குறிக்கப்பட்டுள்ளது. களத்திற்கு வருவதற்கு முன்னரே பைஸாந்தியப் படையினர் சரிபாதி பின்வாங்கிச் சென்றுவிட, நடைபெற்றக் கடுமையான போரில் ஸெல்ஜுக் படை அமோக வெற்றியடைந்தது. பைஸாந்தியர்களுக்கு மாபெரும் தோல்வி என்பது ஒருபுறமிருக்க, அதுவரை அவர்களது யுத்த வரலாற்றில் நடைபெறாத விஷயம் முதன்முறையாக அப்போரில் இடம்பெற்றது.

பைஸாந்திய சக்ரவர்த்தி போர்க் கைதியாகப் பிடிபட்டார்! எத்தகு அவமானம்? வெட்கித்துப்போனது பைஸாந்தியப் படை. மனோரீதியாக அவர்களை அந்தத் தோல்வி பெரிதும் தாக்கியது, காயப்படுத்தியது.

ஒரு வாரத்திற்குப் பின், ஒப்பந்தங்கள், பணயத் தொகை என்று சக்ரவரத்தி ரோமானஸை அல்ப் அர்ஸலான் விடுவித்துவிட்டாலும் ‘பைஸாந்தியப் பேரரசிற்கு அது மிகவும் பின்னடைவை ஏற்படுத்திவிட்ட போர்; அவர்களின் அரசியலை மாற்றி அமைத்த பேரழிவு’ என்றே கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இத் தோல்விக்குப்பின் அவர்களுக்குள் அதிகாரப் போர் மேலோங்கி, அரசியல் களேபரங்கள் நிகழ்ந்து, ஒருவழியாக மைக்கேல் VII என்பவர் பைஸாந்தியச் சக்ரவர்த்தியானார்.

பைஸாந்தியக் கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை ஜெருசலத்தைவிட அனட்டோலியா நகரம்தான் அவர்களுக்கு முக்கியமான தளம். அது பறிபோனது; துருக்கியர்களையும் வெல்ல முடியவில்லை, ஒடுக்க முடியவில்லை என்றானதும் வேறு வழியில்லாமல் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். மேற்குலகின் தேவாலயத்துடன் பைஸாந்தியர்களுக்கு நெடுங்காலமாகவே ஒட்டாத உறவு. கசப்புகள், வேறுபாடுகள் இருந்த போதிலும் இப்பொழுது தம் இடுக்கண் களைய, அவர்களது நட்பையும் உதவியையும் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்று தீர்மானித்து உதவி கோரி, ஐரோப்பாவில் உள்ள போப்பாண்டவருக்குத் தகவல் அனுப்பினார் மைக்கேல். அச்சமயம் போப்பாக இருந்தவர் கிரிகோரி VII.

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் மத்தியில், பாழ்பட்டுப்போய்க் கிடக்கும் மேற்கத்திய கிறிஸ்தவ உலகை மீட்டெடுக்க வேண்டும் என்று ஐரோப்பாவின் ரோம் நகரத்துப் போப்பாண்டவர் சபை தீர்மானித்தது. அதற்கான சீர்திருத்த இயக்கம் ஒன்றைத் தன் தலைமையில் முன்னெடுத்தது. பாதிரிமார்களுக்கும் மத ஈடுபாடற்ற ஆட்சியாளர்களுக்கும் இடையே நிலவிவரும் தொடர்புகளால் ஏற்பட்டுவிட்ட மோசமான ஆதிக்கமே தேவாலயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கருதியது போப்பின் திருச்சபை. தேவாலயத்தின் கழுத்தை நெரித்துப் பிடித்திருக்கும் சக்ரவர்த்திகள் மற்றும் அரசர்களின் பிடிகளை முறிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரேவழி இறைவன் தமக்கு அளித்திருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் போப் நிலைநாட்டுவதே என்று அவர்களுக்குள் குரல் உயர ஆரம்பித்தது. அதைத் தீவிரமாக முன்னெடுத்தவர் போப் கிரிகோரி.

லத்தீன் திருச்சபையின் விவகாரங்களை முற்றிலுமாய்க் கைப்பற்றி, கிறிஸ்தவ மக்களைச் சீர்ப்படுத்தவே தாம் இப் புவிக்கு அனுப்பப்பட்டிருப்பதாக கிரிகோரி மிகத் தீவிரமாய் நம்பினார். அதை நடைமுறைப்படுத்தக் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடாமல் தழுவி ஏற்றுக்கொள்ள அவர் தயாரானார். போப்பாண்டவரின் ஊழியர்கள் அதற்கென வன்செயல்கள் புரிந்தாலும் அது சரியே, அவர்கள் ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்கள் என நியாயம் கற்பிக்கும் அளவிற்கு அவரது நிலைப்பாடு சென்றது. அவரது வழிகாட்டலின் அடிப்படையில், ‘புனித வன்முறை’ என்ற ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. ரோமுக்கு விசுவாசமான ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்களின் படையினரை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்கு ஆளெடுப்பதற்காக , கிறிஸ்தவப் பாரம்பரியங்களைத் தமக்கு உகந்த முறையில் வியாக்கியானம் புரியவும் ஆரம்பித்தார் போப் கிரிகோரி.

கிறிஸ்தவர்கள் தங்களுள் நிகழ்த்தும் ஆன்மீகப் போராட்டமே ‘கிறிஸ்துவின் போர்’ என்று கிறிஸ்துவத் தத்துவ அறிஞர்கள் வகைப்படுத்தியிருந்தனர். அதுதான் காலங்காலமாக அவர்களது நம்பிக்கை. கிறிஸ்தவத் துறவிகளைத்தாம் ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்கள் என்று அதுநாள்வரை விவரித்து வந்தனர். இவற்றையெல்லாம் தம் நோக்கத்திற்கு ஏற்ப , போப் கிரிகோரி மாற்றி விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். மார்க்க ஞானமற்ற சராசரி மனிதனாக இருந்தாலும் சரி, லத்தீன் தேவாலயத்தைக் காப்பதற்காக ஆயதமேந்திய போரில் ஏசு கிறிஸ்துவின் சிப்பாயாகப் பங்கெடுப்பது கட்டாயக் கடமை என்று அவர் அறிவித்தார்.

இப்படியாக அவரது செயல்பாடுகள் அமைந்திருந்த நிலையில் கிழக்கத்திய கிறிஸ்தவர்களான பைஸாந்தியர்களிடமிருந்து  உதவி கேட்டு வந்த தகவல், பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந்தது போப்புக்கு. கி.பி. 1074 ஆம் ஆண்டு  தம்முடைய தலைமையில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டார் போப் கிரிகோரி. அதைச் செயல்படுத்துவதற்காக அப்பட்டமான பொய்களைக் கூறவும் அவர் தயங்கவில்லை. ‘அங்கு நம் கிறிஸ்தவச் சகோதரர்களை முஸ்லிம்கள் நாள்தோறும் ஆடு, மாடுகளைப்போல் கொன்று கூறுபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பதற்காகப் போரில் ஈடுபடும் லத்தீன் கிறிஸ்தவர்களுக்குப் பரலோகத்தில் வெகுமதி நிச்சயம்’ என்றெல்லாம் பரப்பப்பட்டது. ஆனால் அவர் நினைத்த அளவிற்கு அத் திட்டம் வெற்றியடைவில்லை.

தவிர, போப்பாண்டவர்களின் திருச்சபையின் ஆதிக்கத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்த அவரது வேகமான செயல்பாடுகளெல்லாம் புனித ரோமானியப் பேரரசராக ஆட்சி புரிந்த ஜெர்மனியின் சக்ரவத்தி நாலாவது ஹென்றியுடன் பெரும் அதிகார மோதலை ஏற்படுத்திவிட்டது. அது ஓங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் மன்னர் ஹென்றி படை திரட்டிச் சென்று, ரோமைக் கைப்பற்றி, போப் கிரிகோரியை இத்தாலியின் தென்பகுதிக்கு நாடு கடத்தினார். இத்தகு நிகழ்வுகளால் போப் கிரிகோரியின் புனிதப் போர்த் திட்டம் அவருடைய காலத்தில் நடைமுறைக்கு வரமுடியாமல் போய் அப்படியே நீர்த்தும் போனது. ஆனால் அவர் மூட்டிய தீ?

அது மட்டும் நீறுபூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்க, அதைத் தக்க முறையில் விசிறி ஜுவாலை விடச் செய்தார் அடுத்து வந்த போப் அர்பன். கி.பி. 1095 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள க்ளெர்மான்ட் நகரில் அதற்கான அச்சாரம் இடப்பட்டது.

 oOo

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 3
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி 
தொடர் - 5

இந்தக் கட்டுரையின் மூலம்சத்தியமார்க்கம்.காம். ஆசிரியர்:  நூருத்தீன்






1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்

பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்

ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்

கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு

பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம்

கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
15 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
16 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
21 திருநெல்வேலி வரலாறு...!
22 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
23 அந்த இரண்டணா ......
24 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
27 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
28 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
31 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
32 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
33 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
34 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
35 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
36 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
37 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
43 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
44 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
45 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
46 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
47 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
48 சூஃபிக்களும் புனித போர்களும்
49 யார் தேச விரோதி?
50 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
51 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
52 விடுதலைப்போரில் வீரமங்கையர்
53 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
54 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
55 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
56 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
57 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
58 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
59 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
60 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
61 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
62 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 தமிழகத்தில் முஸ்லீம்கள்
65 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
66 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
67 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
68 பாடலியில் ஒரு புலி
69 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
70 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
71 முதல் சுதந்திரப் பிரகடனம்
72 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
73 காலித் பின் வலீத் (ரலி)
74 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
75 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
76 முதல் வாள்!
77 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
78 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
79 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்