Tamil Islamic Media

கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்

ஏ.வேதாசலம்

மதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப்பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையம். இப்பகுதியில் பழமையான பள்ளிவாசல் ஒன்றும், தர்கா ஒன்றும் ஒரே வளாகத்தில் உள்ளன. இதனைச் சூழ்ந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள தர்கா கி.பி.14ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தர்காவில் அடக்கமாயிருப்பவர் கி.பி.14ம் நூற்றாண்டில் மதுரைப்பகுதியை ஆண்ட (கி.பி.1338ல்) சுல்தான் அலாவுதீன் உதௌஜி ஆவர். (1) இவரே தற்போது காஜா சையத் சுல்தான் அலாவுதீன் என்று அழைக்கப்பட்டு வருகின்றார். இவரது மருமகனான குத்புத்தீன் பிரோம் ஷாக்குஸ் அவர்களும் இதில் அடக்கமாயுள்ளார். தற்போது இத்தர்காவின் உட்புறம் இரண்டு கல்லறைகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட கருத்திற்குச் சமகாலத்துச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இதற்கு மாறான (2) வலுவான கருத்தும் இல்லை.

தமிழ் மன்னர்கள் இறந்தபோது அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் பள்ளிப்படை கோயில் எழுப்பப்படுவது தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதற்குச் சான்றுகளும் பல உள்ளன. பாண்டியநாட்டில் கி.பி.10ம் நூற்றாண்டில் இறந்துபோன சுந்தரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனுக்குக் காமராசர் மாவட்டம் திருச்சுழி அருகே குண்டாற்றின் கீழ்க்கரையில் பள்ளிப்படைக்கோயில் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. (3) தற்போது இக்கோயில் உள்ள பகுதியும் அதனைச் சார்ந்த குடியிருப்பும், 'பள்ளிமடம்' என்ற பெயரில் ஊராக விளங்கி வருகின்றது. இதனையடுத்து இஸ்லாமிய அரசர் கல்லறையைக் கொண்ட கோரிப்பாளையம் தர்கா விளங்குகின்றது எனலாம். சமயப்பற்றுக் கொண்டவராக விளங்கிய இவர் நீர் அருந்தும்போது புறச்சமயத்தவரின் அம்பால் அடிபட்டு இறந்தார். இதனால் இவர் நினைவாக இத்தர்கா எழுப்பப்பட்டிருக்க வேண்டும். (4) தற்போது பிற சமயத்தவரும் வந்து வழிபடும் சமயச் சிறப்பு வாய்ந்த சமய ஒற்றுமை படைத்த தலமாக இத்தர்கா விளங்கி வருகின்றது.

இத்தர்கா இஸ்லாமியரது கட்டடக்கலையின் அடிப்படை மரபுகள் மாறாத வகையில், தமிழகக் கட்டடக்கலை மரபில் எழுப்பப்பட்டுள்ளது. வேலைப்பாடுமிக்க தூண்கள் அணிசெய்யும் திருச்சுற்றின் நடுவே கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்ட ஓர் அறையுடன் விளங்குகின்றது. இவ்வறையின் உட்புறம் இரண்டு சமாதிகள் உள்ளன. இவை வெளியிலிருந்து சமாதியைக் கண்டு கொள்வதற்கென்று அமைக்கப்பட்டவையாகும். வைதிக சமயக்கோயில்களில் இவ்விடங்களில் தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இத்தர்கா கல்லாலேயே உருவாக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த கட்டப்பாணியில் விளங்குகிறது.

கல்வெட்டுகள்

இத்தர்காவின் வெளிப்புறம் மேல்திசையிலும் வடதிசையிலும் அடித்தளத்தில் தமிழ்க் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவை முழுமையாக இல்லை. கி.பி.14ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இப்பகுதியில் இருந்த நாட்டாரின் இசைவின் பேரில்குளம் ஒன்று விற்கப்பட்டு அதற்காக விலையோலை செய்து அளிக்கப்பட்டிருப்பதைத் தெரிவிக்கின்றது. வடபுறமுள்ள கல்வெட்டும் இச்செய்தியின் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும். இதில் பாண்டியத்தரையன் என்ற அதிகாரியின் பெயர் ஒன்று குறிப்பிடப்படுகின்றது. கல்வெட்டு முழுமையாக கிடைக்காமையால் தர்காவோடு இதன் தொடர்பு தெரியவில்லை.

வீரப்பநாயக்கன் கல்வெட்டு

தர்காவின் உட்புறம் தென்புறத்திசையில் நடைவழியில் நான்கு புறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல் ஒன்று நடப்பட்டுள்ளது. இதிலுள்ள கல்வெட்டு மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595) காலத்தைச் சார்ந்தது. கி.பி.1573ம் ஆண்டில் பவ வருடத்தில் தை மாதம் பதினோறாம் தேதி எழுதப்பட்டுள்ளன. நூற்று எண்பத்து மூன்று வரிகளைக் கொண்டது. பெரும்பகுதி தமிழ் எழுத்துக்களில் இடையிடையே கிரந்தவெழுத்துக்கள் விரவி எழுதப்பட்டுள்ளன. இறுதியில் தெலுங்கு எழுத்துக்களும் நான்கு வரிகளில் உள்ளன. இக்கல்வெட்டில் ஓலைச்சுவடி நடையின் செல்வாக்கை மிகுதியாகக் காண முடிகின்றது.

கல்வெட்டு 'சிவமயம்' என்று வைதீகமரபுச் சொல்லுடன் விளங்குகிறது. இவற்றுடன் குடுவை, கண்ணாடி, வில், அம்பு, கொடி ஆகியவற்றின் உருவங்கள் (கோட்டு உருவமாக) பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் முதற்பகுதி (91 வரிகள் வரை) நாயக்க மன்னர்களது கல்வெட்டுக்களில் வழக்கமாகப் பொறிக்கப்படும் அரசர்களின் பெருமையைக் குறிப்பிடும் தொடர்களைக் கொண்டு விளங்குகின்றது. அடுத்த பகுதியில் (வரி 105 வரை) மதுரை நாயக்க மன்னர் பரம்பரை எடுத்துக் கூறப்படுகின்றது. தொடர்ந்து வரும் வரிகள் கல்வெட்டின் காலத்தினையும் கல்வெட்டு பொறிக்கப்பட்ட நோக்கத்தையும் தெரிவிக்கின்றன. இறுதிவரிகள் அறத்தைப் பேண வேண்டிய முறையை வலியுறுத்திக் கூறுகின்றன.

கல்வெட்டுச் செய்தி

மதுரை வளநாட்டில் வைகைநதிக்கு வடக்கிலிருக்கும் 'கோரிப்பாளையம் தில்லி ஒரு கோல் சுலுத்தான் பள்ளிவாசல் கோரி'க்கு சொரிக்குடி, சொக்கிகுளம், பீவிகுளம், கன்னாநேம்பல், சிறுதூர், திருப்பாலை ஆகிய ஆறு ஊர்கள், 'கூன்பாண்டியன்' காலத்தில் அளிக்கப்பட்டன. கோரிப்பாளையம் நிலம் அடி ஒன்றுக்கு ஒரு தங்கம் என்ற அளவில் பதினாலாயிரம் தங்கம் அளிக்கப்பட்டு விலை நிச்சயம் செய்து அளிக்கப்பட்டது. இதன் எல்லைகளைக் குறிக்கும் வில்லு எல்கைகற்களும் நடப்பெற்று நடைமுறையில் இருந்து வந்தது. இதன்பிறகு வீரப்பநாயக்கன் காலத்தில் கோரியைச் சார்ந்த நிர்வாகத்தினர்க்கும் (மஸ்கருக்கும்) அரச ஆட்சியில் இருந்தோர்க்கும் இந்நடைமுறை தொடர்பாக வழக்கு ஏற்பட்டு வீரப்பநாயக்கர் முன் வழக்கு விசாரணையும் நடைபெற்றது. வீரப்பநாயக்கர் இந்த வழக்கினைக் கேட்டு முன்பு பாண்டியனார் கோரிப்பாளையம் கோரிக்கு விலைப்பிரமாணம் செய்துகொடுத்து நடந்து வந்த நடைமுறையே உறுதியானதாக இருக்கின்றது. அதனால் அதற்குத் தானும் இசைவளித்து விட்டுக் கொடுத்தேன் என்று தீர்ப்பளித்தார். இதன்படிக் கோரிக்குக் கோரிப்பாளைய நிலமும் ஆறு கிராமமும் தொடர்ந்து உரிமையுடையதாக அனுமதி வழங்கப்பட்டு வழக்கு முடிவடைந்தது என்று வீரப்பநாயக்கர் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

இந்த அறம் சந்திரசூரியன் உள்ளவரைக்கும் நடைபெறட்டும் இதற்குத் தீங்கு விளைவித்தவன் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்திலே போகக் கடவானாகவும் என்று கல்வெட்டு முடிவடைகின்றது.

தானம் அளித்த பாண்டியன்

இக்கல்வெட்டு கோரிப்பாளையம் தர்காவும் அதனைச் சார்ந்த பள்ளிவாசலும் மதுரை சுல்தான்கள் ஆட்சியில் கி.பி.14ம் நூற்றாண்டில் சிறப்புடன் விளங்கியிருப்பதை உணர்த்துகின்றது. மதுரை சுல்தான்கள் அரசு ஆதரவு பெற்ற பள்ளிவாசலாக இது விளங்கியிருக்கின்றது. இதன் ஒரு பகுதியிலேயே மதுரை சுல்தான் அவரது பெருமை கருதி அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனலாம். இது பிற்காலத்தில் இஸ்லாமிய அரசு ஆதரவுடன் கூடிய சமயவளர்ச்சிக்கு வித்திட்டது.

மதுரை சுல்தான்கள் ஆட்சிக்கு முன்பிருந்தே இப்பள்ளிவாசல் பாண்டியரது ஆதரவைப் பெற்றிருப்பதை வீரப்பநாயக்கன் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பாண்டியமன்னன் கி.பி.7ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த கூன்பாண்டியன் என்று பெயர்பெற்ற முற்காலப் பாண்டிய மன்னனான நெடுமாறனாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பிற்காலப் பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே பாண்டிய மன்னர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவளித்து வந்திருப்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன. கி.பி.13ம் நூற்றாண்டில் திருப்புலாணிப் பகுதியில் பவித்திரமாணிக்கப் பட்டினம் என்ற ஊர்ப்பகுதியில் சோனகச் சாமந்தப்பள்ளி என்ற பள்ளிக்கு மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1238-1255) தானம் வழங்கி ஆதரவளித்திருக்கின்றான். பிற்காலப் பாண்டியர் காலத்தில், அப்பேரரசுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்ற குதிரை வாணிகமே இதற்கு அடிப்படையாக விளங்கியது. 5 இந்த நல்லுறவு தொடர்ந்து கி.பி.14ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் இருந்துள்ளதையே கோரிப்பாளையம் பள்ளிவாசலும், தர்காவும் காட்டுகின்றன. கூன்பாண்டியன் என்று கோரிப்பாளையம் கல்வெட்டில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னன் மதுரையில் கி.பி.13ம் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி.14ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆட்சிபுரிந்த பாண்டியமன்னர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அரச மரபினர் ஒருவரது காலத்தில் அளிக்கப்பட்ட தானங்கள் அடுத்து ஆட்சிக்கு வரும் அரச மரபினர் காலத்தில் நடைமுறையில் வழக்கிழந்து போயின. இதற்கடுத்து வருவோரிடம் அது குறித்து முறையிடும்போது அவை மீண்டும் உறுதி செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன. அரசனே இதுபோன்ற சமயங்களில் தலையிட்டு நியாயம் வழங்கியிருக்கின்றான். அந்தணன் ஒருவனுக்குச் சங்ககாலத்தில் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியினால் வேள்விக்குடி என்ற ஊர் தானமாக அளிக்கப்பட்டது. அடுத்து வந்த களப்பிரர் காலத்தில் அத்தானம் ஒழிக்கப்பட்டது. சிறிது காலத்தில் பாண்டிய நாட்டில் பாண்டியர் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். வேள்விக்குடியை பாண்டியனிடம் கொடைபெற்ற அந்தணன் வழிவந்த ஒருவன் இதனைத் தன்காலத்தில் ஆட்சி புரிந்த பராந்தக நெடுஞ்சடையனிடம் (கி.பி.775-815) எடுத்துக்கூறி அதற்குரிய சான்றையும் காட்டி முறையிட்டான். பாண்டியன் நெடுஞ்சடையன் மீண்டும் வேள்விக்குடியை அவ்வந்தணர் வழிவந்தோர்க்கு அளித்தான். இச்செய்தியை வேள்விக்குடிச் செப்பேடு தெரிவிக்கின்றது.

இதுபோன்று பிற்காலப் பாண்டியர் காலத்தில் கோரிப்பாளையம் தர்காவிற்கு அளிக்கப்பட்ட தானம் அடுத்து வந்த நாயக்கர் காலத்தில் தொடர்ந்து நடைபெறுவதா என்பது போன்ற பிரச்னைகள் தோன்றி அளிக்கப்பட்ட தானம் குறித்து வழக்கு எழுந்திருக்க வேண்டும். இதனை வீரப்பநாயக்கரே விசாரித்து சான்றாதாரங்கள் மூலம் இத்தானம் உறுதியான என்று தெரிந்துகொண்டார். ஏற்கனவே பாண்டியர் காலத்தில் அளித்து நடைபெற்றுவந்த தானத்தைத் தொடர்ந்து இருக்கும்படியாகச் செய்த ஆணை வழங்கியுள்ளார். இரு சமூகத்தினரிடையே எழவிருந்த சிக்கலைத் தீர்த்து அவ்வழக்குத் தொடர்பான தீர்ப்பைக் கல்லில் பொறித்து தர்காவின் வளாகத்தில் நட்டுவைக்குமாறு செய்தார். வீரப்ப நாயக்கர் சமயப்பொறை வாய்ந்த மன்னராக விளங்கியிருக்கின்றார். இவர் தமது காலத்திலேயே மதுரையில் கி.பி.1592ல் கிறித்தவம் நிலைபெறுவதற்கு ஆதரவு அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

I-தர்காவின் உட்புறக் கல்வெட்டு

பக்கம் - 1

1. சிவமயம்
2. சொஸ்த்தி
3. ஸ்ரீரிமன்
4. மகாமண்ட்
5. லெசுரன் அரி
6. யராயற் தளவிப
7. ரடன் பாசைக்கு
8. தப்புவராயிற் கண்
9. டன் மூவராயற்க
10. ண்டன் கண்ட
11. நாடு கொண்டு
12. கொண்ட நாடு
13. குடாதான்
14. பூறவதெஷ்(ச)ண
15. பச்சிம உத்தறச
16. த்துற்சமுத்தராத்து
17. ப(தி)பாண்டிமண்
18. டலஸதாரீபனா
19. சாரியன் சோ
20. ழமண்டல பிற
21. திட்டாபனாசாரி
22. யன் தொண்ட
23. மண்டல சண்ட
24. ப்பிறசண்டன் இ
25. ழமும்ங் கொங்கு
26. கம்பழமும் யாபர்
27. ணனாயிகப் பட்டண
28. மும் கேசரிவேட்
29. டை கொண்டரு
30. ளிய ராசா(தி)ராச
31. ன் ராசபறமேசுற
32. ன் ராசமாத்தாண்
33. டான் ராசகெம்பீ
34. றன் ராசாகள் நெரு
35. நீ(தி) ராசபரிபாலன்
36. ராசர்கள் நம்பிற

பக்கம்-2

37. கோட்டத்தில் மன்
38. னிய கண்ட
39. ன் யுட்டருக்கு சம
40. நேர் பயங்கரன்
41. துட்டரில் துட்டன்
42. துட்ட நெட்டூரன்
43. துட்ட ராட்டற் தல
44. ர(ரக்) குத்தன் துட்ட பா
45. லன் ஒருகோல்ச்
46. சுலுத்தான் துல்க
47. லுக்கற் தளவிபா
48. டன் ஒட்டிய மோ
49. கந் தவிள்த்தான்
50. ஒட்டிய தளவிபா
51. டன் ஒட்டிய மோ
52. கந் தவிள்த்தான்
53. சமைங்கண்டன்
54. சமைய நாராயணன்
55. அட்ட ஆத்திரிய கம்ப
56. ன் செட்ட முடுமன்
57. னியற்முடியான் சம
58. மன்னன் நாராய
59. ணன் இரவிநாராய
60. ணன் வங்கிஷ் நா
61. ராயணன் வேதகு (ல)
62. பிறதாபன் விரி
63. யப்பிறதாபன் கச்ச
64. ப்பிறதாபன் கனகப்
65. பிறதாபன் கீற்த்தி
66. ப்பிறதாபன் அவ
67. விருது கொண்டே
68. வவிறுதுவா மலை
69. கலங்கிலும் மநங்
70. கலங்காத கண்ட
71. ன் மன்னிய சூரதா
72. ரனாரணமுச் கெந்
73. பீரெனாணமுக சுத்த
74. வீரன் வில்லுக்கு வி�
75. சயன் சொல்லுக்கு ச
76. த்திய அரிச்சந்திரன்
77. குடைக்கி கற்னன்
78. தனத்துக்கு குபேறன் அ
79. ழகில் மன்மதன் வீரல
80. ட்சுமி விசையலட்சுமி
81. சந்தானலட்சுமி சய
82. பாக்கிய லட்சுமி தி

பக்கம்-3

83. யாகலட்சுமி போ
84. கலட்சுமி சவூரியலட்
85. சுமி கிரந்தலட்சுமி
86. அட்டலட்சுமியும் பொ
87. ருந்திய மாற்பெ
88. ன் எட்டுத்திக்கு சத்த
89. சாகறமும் ஒருகு
90. டைக்குளாண்டு கொ
91. ண்டருளிய மல்லிகா
92. ச்சிணராயற் தேவ
93. மகாராயற் விருப்பா
94. ச்சிராயற் புசபெலரா
95. யற் வீரநரசிங்கரா
96. யற் ஆனைகுந்தி வெ
97. ங்கிடபதி தேவமகா
98. ராயற்குமரர் நரசி
99. ங்கியராயற் கிருஷ்ண
100. ராயற் ராமராயற் குமர
101. ர் கிஷ்டனராய றவற்
102. கள் காரியத்துக்கு காற்
103. த்தரான விசுனாத
104. னாயக்கற் கிருஷ்ண
105. ப்பனாயக்கற் வீரப்ப
106. னாயக்க ரய்யனவ
107. ற்கள் ராட்சிய பரி
108. பாலினம் பண்ணி
109. செய்தருளி நின்ற
110. சாலிவாகன சத
111. ரசத்துவம் சூசுள
112. க்ஷஇ யட்ருயருக்கு மேல்(செ)
113. ல்லா நின்ற பவ
114. ளூதை மீ சம் யக
115. உ தீ சுபயோக சு
116. பகற்ணமும் கூடி
117. ன சுபதினத்தில்
118. மதுரை வளனா
119. ட்டில் வைகை ந
120. திக்கு வடக்காகிய
121. கோரிப்பாளையம்
122. தில்லி ஒருகோ
123. ல் சுலுத்தாற் பள்
 


Source: http://www.intamm.com/history/korippalayam.htm


1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி

அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்

கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார்.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி

ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்?

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு

அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி

அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
15 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
16 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
17 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
18 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
19 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
20 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
21 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
22 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
23 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
24 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
25 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
26 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
27 வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
28 தர்ம கற்கள் - அழகிய தர்மம்
29 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
30 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
31 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
32 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
33 திருநெல்வேலி வரலாறு...!
34 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
35 அந்த இரண்டணா ......
36 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
37 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
38 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
39 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
40 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
41 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
42 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
43 ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
44 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
45 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
46 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
47 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
48 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
49 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
50 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
51 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
52 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
53 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
54 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
55 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
56 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
57 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
58 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
59 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
60 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
61 சூஃபிக்களும் புனித போர்களும்
62 யார் தேச விரோதி?
63 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
64 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
65 விடுதலைப்போரில் வீரமங்கையர்
66 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
67 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
68 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
69 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
70 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
71 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
72 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
73 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
74 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
75 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
76 தமிழகத்தில் முஸ்லீம்கள்
77 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
78 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
79 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
80 பாடலியில் ஒரு புலி
81 தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
82 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
83 முதல் சுதந்திரப் பிரகடனம்
84 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
85 காலித் பின் வலீத் (ரலி)
86 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
87 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
88 முதல் வாள்!
89 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
90 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
91 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்