தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

"தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு"

ஆயுதப்புரட்சி ஒன்றுதான் இந்திய மண்ணில் விடுதலையை வரவு வைக்க ஒரே வழி என்ற முடிவுடன் உத்திரப்பிரதேசத்தில் வலுவான ஓர் இளைஞர் அமைப்பு உருவானது; சுதந்திரநாத் சனயால், போகேஷ்பாபு, ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற, இவ்விளைஞர் அமைப்பின் துவக்க கர்த்தாக்களில் ஒருவர் ஷாஜஹான்பூரைச் சார்ந்த அஸ்பாகுல்கான் என்ற இளைஞர் ஆவார்.

ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் வலுவான இளைஞர் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவ்விளைஞர்களுக்கு, ஆயுதங்கள் வாங்கப் பணவசதி தேவைப்பட்டது. அதற்காக அரசாங்க கஜானாக்களைச் சூறையாடத் திட்டம் வகுக்கப்பட்டது.

1925 ஆகஸ்ட் 26 - இல் உத்திரப்பிதேசத்தில் சஹான்பூரிலிருந்து லகனோவிற்கு அரசாங்க கஜானாப் பணம் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் தகவல் இவர்களுக்குக் கிடைக்கிறது. கஹோரி கிராமத்தில் அந்த ரயிலைத் தடுத்து நிறுத்தி கஜானாப் பணத்தைச் சூறையாட அஸ்பாகுல்கான், ராம் பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர ஆஸாத், ரோஷன்சிங், ராஜேந்திர லால் ஆகியோர் தலைமையில் ஓர் இளைஞர் குழு புறப்படுகிறது.

கஹோரியில் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டு கஜானாப் பணம் சூறையாடப்படுகிறது. இதன் விளைவாகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கையில் ஆங்கில அரசு இறங்குகிறது. தெஹ்லீ என்னும் இடத்தில் அஸ்பாகுல்லாகான் கைது செய்யப்பட்டார்.
லாகூரில் 18 மாதங்கள் நடைபெற்ற விசாரணையில், இவர் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பி ஓட முயன்றவர், கஹோரிகொள்ளையில் ஈடுபட்டவர் போன்ற ஐந்து குற்றங்களை அஸ்பாகுல்கான் மீது சுமத்தி, தூக்குத்தணடனை வழங்கியது நீதிமன்றம்.

சில நாளே ஜீவித்திருப்பேன். என் தேசத்தின் ஒரு பிடிமண்ணை என் கஃபன் ஆடை (சவத்துணிக்குள்)க்குள் வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள்!.

- என்ற பொருள் பொதிந்த கவிதையை எழுதி வைத்தவராக,
லெப்பைக்க என்ற ஹஜ் பயணிகளின் தாரகமந்திரத்தைச் சப்தமாக முழங்கியவராக,
குர்ஆனின் உரையைக் கையில் ஏந்தியவராக....

26-09-1926- இல் தூக்கு கயிற்றில் தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் அஸ்பாகுல்கான்.

இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் (ஆயுதப் புரட்சி) முன்னோடி ஆவார்.

- (ஏ.என். முஹம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.223-224.)






1 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12

கடந்த பதினோரு அத்தியாயங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகளையும் எக்கச்சக்கத் தகவல்களையும் மூச்சு முட்டக் கடந்து, இப்பொழுதுதான் முதலாம் சிலுவை யுத்தத்தை நெருங்கியிருக்கின்றோம்.

2 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11

தன் கூட்டத்திலிருந்து ஆளைத் தேர்ந்தெடுத்துப் பணியை ஒப்படைப்பான். தனியாளாகவோ ஓரிருவராகவோ நாலைந்து பேர் கொண்ட சிறு குழுவாகவோ அவர்கள் கிளம்புவார்கள். கத்தி, வாள், குறுவாள் என்று ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்திக்கொள்வார்கள். குறி வைத்தவரைத் தொழில் நேர்த்தியுடன் கனக் கச்சிதமாகத் தாக்கி அவரின் கதையை முடித்துவிடுவார்கள்.

3 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1

ஸலாஹுத்தீன் ஐயூபி மன்னராய் உருவான காலத்திலிருந்தே ஜெருசலம்தான் அவரது இலட்சியமாய் இருந்தது. நெடுக நடைபெற்ற ஒவ்வொரு போருக்கும் அரசியல் நகர்வுகளுக்கும் சண்டைக்கும் சமாதானத்திற்கும் அந் நகரின் விடுதலைதான் அடிநாதமாய்த் திகழ்ந்தது.

4 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2

டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில் புழுதியைப் பரப்பி வேகவேகமாக வந்து கொண்டிருந்தது.

5 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3

நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு, “கிளம்புங்கள். செல்வோம் களத்திற்கு” என்று இமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரைக் கைப்பற்றப் படையெடுத்தார்.

6 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
9 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
10 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
11 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
12 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
13 சூஃபிக்களும் புனித போர்களும்
14 யார் தேச விரோதி?
15 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
16 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
17 விடுதலைப்போரில் வீரமங்கையர்
18 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
19 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
20 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
21 அந்த இரண்டணா ......
22 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
23 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
24 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
25 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
26 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
27 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
28 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
29 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
30 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
31 தமிழகத்தில் முஸ்லீம்கள்
32 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
33 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
34 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
35 பாடலியில் ஒரு புலி
36 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
37 முதல் சுதந்திரப் பிரகடனம்
38 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
39 காலித் பின் வலீத் (ரலி)
40 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
41 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
42 முதல் வாள்!
43 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
44 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
45 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்
46 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
47 திருநெல்வேலி வரலாறு...!